மனைவியின் சிகிச்சையில் திருப்தி அளிக்காததால் தட்டிக்கேட்ட கணவர்: அடித்து கொன்ற அரசு மருத்துவமனை ஊழியர்

Tamil news from around the world!

மனைவியின் சிகிச்சையில் திருப்தி அளிக்காததால் தட்டிக்கேட்ட கணவர்: அடித்து கொன்ற அரசு மருத்துவமனை ஊழியர்

புதுடெல்லி: டெல்லியில் 32 வயதுடைய நபரை அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊனமுற்ற மனைவியின் சிகிச்சை தொடர்பாக தட்டிக் கேட்டதால் அடித்து கொல்லப்பட்டார் என்று உயிரிழந்த நபரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவரின் மனைவி கூறுகையில், மருத்துவமனையில் எனக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது எனது கணவருக்கு திருப்தி இல்லை. எனவே மருத்துவர்களை உடனடியாக அழைக்கும் படி ஊழியரிடம் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அரசு மருத்துவமனை ஊழியர், அவரை சரமாரியாக திட்டினார். பின்பு அவரை அடுத்த அறைக்கு இழுத்துச் சென்று அடித்து கொலை செய்துள்ளார் என்று கூறியுள்ளார்.

More news like this

delhi
, Feb 14, 2018