தாய், தந்தையை இழந்த எஸ்.ஐ. மகளுக்கு ஒருநாள் சம்பளத்தை வழங்கிய திருவண்ணாமலை போலீசார்

Tamil news from around the world!

தாய், தந்தையை இழந்த எஸ்.ஐ. மகளுக்கு ஒருநாள் சம்பளத்தை வழங்கிய திருவண்ணாமலை போலீசார்

சென்னை:  திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி 10 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார் இவர்களின் ஒரே  மகள் ஜெய. சென்னையில் நீட் தேர்வு பயிற்சி பெற்று வருகிறார்.இந்நிலையில் அண்ணாமலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு கடந்த மாதம் 13ம் தேதி மரணமடைந்தார். தாய், தந்தையை இழந்த ஜெயயின் படிப்பு கேள்விக்குறியானது. இதற்கிடையில், இறந்து போன சிறப்பு உதவி ஆய்வாளரின்  மகளான ஜெயக்கு உதவிடும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட காவலர்கள் தங்களது அக்டோபர் மாத ஊதியத்தில் ஒரு நாள் ஊதியமான ரூ.8 லட்சத்து 23 ஆயிரத்து 750யை வழங்க முன் வந்தனர். அந்தப் பணத்தை, டிஜிபி டி.கே.ராஜேந்திரன், ஜெயயிடம் வழங்கினார்.அப்போது கலெக்டர் கந்தசாமி, வடக்கு மண்டல ஐஜி நாகராஜன், காஞ்சிபுரம் டிஐஜி தேன்மொழி, திருவண்ணாமலை எஸ்பி சிபி சக்கரவர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

More news like this

chennai kanchipuram
, Nov 8, 2018