வாழ்வாதாரம் இழந்ததால் தன்னை கருணைக் கொலை செய்ய கோரி திருநங்கை உருக்கமாக கடிதம்

Tamil news from around the world!

வாழ்வாதாரம் இழந்ததால் தன்னை கருணைக் கொலை செய்ய கோரி திருநங்கை உருக்கமாக கடிதம்

ஏர் இந்தியா நிறுவனத்தில் பணி கிடைக்காததை அடுத்து திருநங்கை ஷனாவி, தன்னை கருணை கொலை செய்யக் கோரி நாளிதழ் ஒன்றுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடித்ததில், திருநங்கை என்பதை காரணம் காட்டி எனக்கு கிடைக்க வேண்டிய வேலை மறுக்கப்படுகிறது. நான் திருநங்கை என்பதால் வரிகளில் ஏதாவது தள்ளுபடி செய்கிறார்களா? இல்லையே, நான் வரிகளை செலுத்திக் கொண்டு தானே இருக்கிறேன். என்னிடம் தகுதி இருக்கிறது, வேலை பார்த்த அனுபவமும் இருக்கிறது. எனினும் என்னுடைய பாலியல் தன்மையை காரணம் காட்டி எனக்கு கிடைக்க வேண்டிய வேலை மறுக்கப்படுகிறது. இதற்கடுத்து வேறு எந்தவொரு விமான நிறுவனத்திலும் நான் வேலை தேடப்போவதில்லை. ஏனெனில் அரசாங்க விமான நிறுவனத்திலே எங்களுக்கு ஒதுக்கீடு இல்லை என்று சொல்லிவிட்டது, தனியார் விமான நிறுவனத்தில் எங்களுக்கு ஒதுக்கீடு இருக்கும் என்று நான் எப்படி எதிர்பார்க்க முடியும்? எனவே இனி எனக்கு வாழ்வதற்கு வழியில்லை. அதனால் என்னை கருணைக் கொலை செய்துவிடுங்கள் என்று கூறியிருக்கிறார்.

More news like this

, Feb 14, 2018