சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை

Tamil news from around the world!

சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை

ஆலந்தூர்: சாம்பல் புதனை முன்னிட்டு கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் நேற்று தொடங்கியது. இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று சிறப்பு ஆராதனை நடந்தது. பரங்கிமலையில் உள்ள புனித தோமையர் ஆலயத்தில் பங்கு தந்தை கிறிஸ்துராஜ், புனித ஆராதனை நடத்தினார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அவர்களது நெற்றியில் சாம்பல் திலகமிட்டு ஆசி வழங்கினார். ஆலந்தூர் கிறிஸ்துநாதர் ஆலயத்தில் தவக்காலம் நேற்று தொடங்கியது. போதகர் ரிச்சர்ட் சிறப்பு ஆராதனை நடத்தி, 40 நாட்கள் தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றார்.  பின்னர், இதில் பங்கேற்ற கிறிஸ்தவர்களது நெற்றியில் சாம்பல் திலகமிட்டு ஆசி வழங்கினார். மேலும், ஆலந்தூரில் உள்ள அந்தோணியார் ஆலயம், வாணுவம்பேட்டையில் உள்ள ததேயு ஆலயம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு ஆராதனை நடந்தது.

More news like this

, Feb 14, 2018