தலைமை செயலாளருடன் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆலோசனை

Tamil news from around the world!

தலைமை செயலாளருடன் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆலோசனை

சென்னை: தெற்கு ரயில்வே பொது மேலாளர் குல்ஸ்ரேஸ்தா நேற்று தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது இந்திய ரயில்வே நிர்வாகம் தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு ஒதுக்கியுள்ள நிதி குறித்தும், அந்த நிதியில் இருந்து தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு உட்பட்ட தமிழக பகுதியில் நிறைவேற்றப்படக்கூடிய திட்டங்கள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.மேலும், தமிழக பகுதியில் தற்போது நடந்து வரும் ரயில்வே பணிகள் குறித்தும், எதிர்காலத்தில் நிறைவேற்ற திட்டமிட்டு இருக்க கூடிய திட்டங்கள் குறித்தும் தலைமை செயலாளருக்கு ரயில்வே உயர் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். அதனை தொடர்ந்து, தமிழகத்தில் நிறைவேற்றகூடிய ரயில்வே திட்டங்களை விரைந்து முடிக்க தேவையான ஒத்துழைப்பையும், உதவிகளையும் தருமாறு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம், தெற்கு ரயில்வே பொது மேலாளர் வேண்டுகோள் விடுத்தார்.

More news like this

chennai
, Feb 14, 2018