ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும்: பனகாரியா வலியுறுத்தல்

Tamil news from around the world!

ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும்: பனகாரியா வலியுறுத்தல்

புதுடெல்லி: மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் சமரசத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என நிதி ஆயோக் முன்னாள் துணை தலைவர் அரவிந்த் பனகாரியா வலியுறுத்தியுள்ளார். ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு விஸ்வரூபம் எடுத்து வருகிறது.  இந்த பிரச்னை குறித்து, நிதி ஆயோக் முன்னாள் துணை தலைவர் அரவிந்த் பனகாரியா கூறுகையில், நாட்டு நலனை கருத்தில்  கொண்டு மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து செயல்பட வேண்டும். சமரசம் செய்து கொண்டு வேற்றுமைகளை மறந்து ஒன்றிணைய வேண்டும். அமெரிக்க பெடரல் வங்கியுடன் ஒப்பிடுகையில், சட்ட ரீதியாக இந்திய  ரிசர்வ் வங்கிக்கு தனித்து செயல்படும் அதிகாரம் குறைவாகவே உள்ளது என்றார்.

More news like this

delhi
, Nov 8, 2018