News about Bengaluru

Tamil news from around the world!

முட்டை விலை மேலும் 5 காசு உயர்வு
Dinakaran , Nov 8, 2018
மோடி அரசை அகற்றுவதற்கு நாடு தழுவிய கூட்டணி அமைக்கப்படும் என தேவகவுடா உறுதி
பெங்களூரு : பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய கூட்டணி அமைப்பது பற்றி முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினர். பெங்களூருவில் தேவகவுடா வீட்டில் நடந்த ஆலோசனையில் முதல்வர் குமாரசாமியும் பங்கேற்றார். ஆலோசனைக்கு பிறகு தேவகவுடா, சந்திரபாபு நாயுடு,முதல்வர் குமாரசாமி ஆகிய மூவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது மோடி அரசை அகற்றுவதற்கு நாடு தழுவிய கூட்டணி அமைக்கப்படும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா உறுதி அளித்தார். மதசார்பற்ற கட்சிகள் அனைத்தையும் இணைத்து தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளோம் என்றும் ஸ்டாலின் , மம்தா பேனர்ஜி , மாயாவதி ஆகியோரை ஓரணியில் திரட்ட ஏற்பாடு நடக்கிறது என்றும் கூறினார்.
Dinakaran , Nov 8, 2018
பணமதிப்பு ரத்து செய்யப்பட்டு 2 ஆண்டாகியும் எந்த பலனும் இல்லை : கர்நாடக முதல்வர் குமாரசாமி
பெங்களூரு : பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய கூட்டணி அமைப்பது பற்றி முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினர். பெங்களூருவில் தேவகவுடா வீட்டில் நடந்த ஆலோசனையில் முதல்வர் குமாரசாமியும் பங்கேற்றார். ஆலோசனைக்கு பிறகு தேவகவுடா, சந்திரபாபு நாயுடு,முதல்வர் குமாரசாமி ஆகிய மூவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய குமாரசாமி, பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பொருளாதாரம் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது என்றும் பணமதிப்பு ரத்து செய்யப்பட்டு 2 ஆண்டாகியும் எந்த பலனும் இல்லை என்றும் கூறினார். மேலும் பெட்ரோல்விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு வருகிறது என்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 73 ஆக சரிந்துவிட்டது என்றும் கூறினார்.
Dinakaran , Nov 8, 2018
கர்நாடக முதல்வர் குமாரசாமியை பெங்களூருவில் ஆந்திர முதல்வர் சந்திக்கிறார்
பெங்களூரு : கர்நாடக முதல்வர் குமாரசாமியை பெங்களூருவில் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திக்கிறார். பாஜகவின் கூட்டணியில் இருந்து விலகிய பின்னர் ஆந்திர மாநில முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு, பாஜகவையும், மோடியையும் சரமாரியாக தாக்கி வருகிறார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கூட்டணியை ஒன்று திரட்டும் முனைப்பில் தற்போது செயலாற்றி வருகிறார்.அதன் ஒருபகுதியாக சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.அதன்படி, தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக கட்சியின் தலைவர் முக ஸ்டாலினை நாளை சந்திரபாபு நாயுடு சந்திக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே முதல்வர் குமாரசாமியை பெங்களூருவில் இன்று பிற்பகல் 3 மணிக்கு  சந்திக்க உள்ளார்.
Dinakaran , Nov 7, 2018
தீபாவளியால் முட்டை விலை உயர்வு
Dinakaran , Nov 1, 2018
கடந்த வாரம் என்னை சந்திக்க ரகசிய தூது அனுப்பியதையும் OPS-ஐ ஒப்புக்கொள்ளச் செய்வேன் : டிடிவி
Dinakaran , Oct 6, 2018
அமைச்சரவையை கூட விரிவாக்கம் செய்ய முடியவில்லையே இந்த முதல்வருக்கு!
ThatsTamil , Sep 18, 2018
முதல்வர்கள் மாநாட்டுக்கு ஓபிஎஸ் செல்கிறார்
Dinakaran , Sep 17, 2018
பரங்கிமலையில் விபத்து நிகழ்ந்த இடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
Dinakaran , Jul 24, 2018
ஜெ., மகள் என உரிமை கோரும் வழக்கில் அம்ருதா தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை: நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
சென்னை: ஜெயலலிதாவின் சகோதரி தான் சைலஜா என்று அம்ருதா வழக்கறிஞர் ஐகோர்ட்டில் தகவல் தெரிவித்துள்ளார். தான்தான் ஜெயலலிதாவின் மகள் என்று பெங்களூரு பெண் அம்ருதா வழக்கு தொடர்ந்துள்ளார். ஜெயலலிதாவின் தாய் சந்தியாவுக்கு 3 வாரிசுகள் இருந்ததாக அம்ருதா வழக்கறிஞர் பிரகாஷ் கூறியுள்ளார். ஜெயக்குமார், ஜெயலலிதா, சைலஜா ஆகியோர் சந்தியாவின் வாரிசுகள் என்று கூறினார். ஜெயலலிதா வழக்கில் எல்லாமே கேள்விக்குறியாக உள்ளதாக நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். டி.என்.ஏ சோதனை செய்து உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்று அம்ருதா தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் சொத்துக்காவே கற்பனை செய்து வழக்கு தொடரப்பட்டதாகவும், மேலும் வழக்கு தொடர்பாக அளிக்கப்பட ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்றும் தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இரு தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Dinakaran , Jul 24, 2018
கரைபுரண்டோடும் காவிரி வெள்ளம்.. செல்பி எடுக்க முயன்ற 2 இளைஞர்கள் தவறி விழுந்து பலி
ThatsTamil , Jul 16, 2018