News about Chennai

Tamil news from around the world!

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 3087 சிலை பாதுகாப்பு அறை கட்ட 330 கோடி ஒதுக்கீடு
* தமிழ்நாடு போலீஸ்வீட்டு வசதி கழகம் மூலம் கட்ட முடிவு *ஆணையர் பணீந்திர ரெட்டி தகவல்சென்னை, பிப்.21: தமிழகம் முழுவதும் 3087 சிலை பாதுகாப்பு அறை கட்ட 330 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணியை தமிழ்நாடு போலீஸ் வீட்டு வசதி கழகம் மூலம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி தெரிவித்தார்.  தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 40,190 கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதான கோயில்கள் அடங்கும். இந்த கோயில்களுக்கு சொந்தமாக 3.80 லட்சம் கற்சிலைகள், உலோக திருமேனிகள், விக்ரகங்கள் உள்ளன. இந்த சிலைகளுக்கு வெளிநாடுகளில் மவுசு என்பதால் சமூக விரோதிகள் அதிகாரிகள் சிலருடன் கைகோர்த்து சிலைகளை கடத்தி செல்வதாக கூறப்படுகிறது. இதனால், சமீபகாலமாக கோயில்களில் சிலைகள் காணாமல் போவது தொடர்கதையாகி வருகிறது. கோயில்களில் சிலைகள் பாதுகாப்பு அறை இல்லாததால்தான் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதாக புகார் எழுந்தது. இந்நிலையில், சிலை கடத்தல் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கோயில்களில் சிலை பாதுகாப்பு அறை கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, முதற்கட்டமாக 3087 கோயில்களில் சிலை பாதுகாப்பு அறை அமைக்கப்படுகிறது. இந்த அறையில் கண்காணிப்பு கேமரா மற்றும் அலாரம் வைக்கப்படுகிறது. சிலை பாதுகாப்பு அறை அமைக்கப்பட உள்ள கோயில்கள் கண்டறியப்பட்டு, அதற்கான இடங்களும் தேர்வு செய்யப்பட்டன.ஏற்கனவே, பந்தநல்லூரில் உள்ள சிலை பாதுகாப்பு அறையை மாதிரி வடிவமைப்பாக வைத்து, அதுபோன்றே தமிழகம் முழுவதும் 3087 கோயில்களிலும் சிலை பாதுகாப்பு அறை அமைக்கப்படுகிறது. இதற்காக, தமிழக அரசு சார்பில் 330 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அந்த பணிகளை தமிழ்நாடு போலீஸ் வீட்டு வசதி கழகம் மூலம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது என்று அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி தெரிவித்தார்.  இதுகுறித்து, அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் மேலும் கூறும்போது, ‘ஐகோர்ட் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் 3087 கோயில்களில் சிலை பாதுகாப்பு அறை அமைக்கப்படுகிறது. இப்பணிகளை தமிழ்நாடு பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த துறை சார்பில் மேற்கொள்ள பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதனால், சிலை பாதுகாப்பு அறை அமைக்க மேலும் காலதாமதம் ஆகும். எனவேதான் தமிழ்நாடு போலீஸ் வீட்டு வசதி கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என்றார்.
Dinakaran , Feb 20, 2019
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் ஒதுக்கீட்டில் முழுதிருப்தி: வேணுகோபால் பேட்டி
Dinakaran , Feb 20, 2019
மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை
வேளச்சேரி: வேளச்சேரி அடுத்த சித்தாலப்பாக்கம், நாகலட்சுமி நகர், 9வது தெருவில் உள்ள வீட்டின் 2வது மாடியில் இருந்து கீழே குதித்து   பெண்  தற்கொலை செய்து ெகாண்டார். தகவலறிந்த பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். கோவையை  சேர்ந்தவர் திரிசங்கு என்பவர் அங்குள்ள ஓட்டலில் வேலை செய்கிறார். இவரது மகள் ரேஷ்மா தனது சசோதரன் ராகுலுடன் மேற்கண்ட முகவரியில் வசிக்கிறார். அழகு கலை நிபுணரான ரேஷ்மா கோவையில் ஒரு வரை காதலித்ததாகவும், பெற்றோர் எதிர்ப்பால் சில மாதம் முன்பு சென்னைக்கு அனுப்பி வைத்ததும் தெரிந்தது. இந்த காதலுக்கு ராகுல் எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
Dinakaran , Feb 19, 2019
சமூக செயற்பாட்டாளர் முகிலன் மீதான ஆட்கொணர்வு மனு : காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை : சமூக செயற்பாட்டாளர் முகிலனை கண்டுபிடிக்கக்கோரிய வழக்கில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் போலீஸ் பிப்ரவரி 22ல் நேரில் ஆஜராகி பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை; சென்னை மாநகர காவல் ஆணையர், காஞ்சிபுரம், விழுப்புரம் எஸ்.பிக்கள் விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க செயற்பாட்டாளர் முகிலனை கண்டுபிடிக்கக்கோரிய ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது. ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள்' என்ற வீடியோவை வெளியிட்ட அடுத்தநாள் முகிலன் காணாமல் போனார். பிப்.15 இரவு 11.50க்கு மதுரைக்கு செல்வதாக சென்ற முகிலன் திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Dinakaran , Feb 18, 2019
பேனர் விவகாரத்தில் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பை அரசு செய்கிறது : உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி
சென்னை : விதிகள் மீறி வைக்கப்படும் பேனர்கள் குறித்து வழக்குகள், அது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் அதிகரித்து கொண்டே செல்கிறது என்று உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. கோவையில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக அமைச்சர்களை வரவேற்று, கடந்த ஒரு வாரமாக விதிகளை மீறி பேனர் வைக்கப்பட்டதாக டிராபிக் ராமசாமி நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அப்போது நீதிமன்றம் உத்தரவிட்டால்தான் விதிமீறி வைக்கப்பட்ட பேனர்களை அரசு அகற்றுமா? என்றும் விதிமீறல் பேனர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் சாலையில் செல்கிறார்களா, ஹெலிகாப்டரில் பறக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், டிஜிட்டல் பேனர் விவகாரத்தில் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பை தமிழக அரசு செய்து வருவதாகஅதிருப்தி தெரிவித்தனர்.
Dinakaran , Feb 18, 2019
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவு
டெல்லி :  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்து தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவன கோரிக்கைகையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. ஸ்டெர்லைட் திறக்க அனுமதித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. ஸ்டெர்லைட் ஆலை வழ்க்கில் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக வேதாந்தா நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. 
Dinakaran , Feb 17, 2019
சிலை கடத்தல் வழக்கு உச்ச நீதிமன்றம் 19ல் விசாரணை
புதுடெல்லி: தமிழகத்தில் நடந்துள்ள சிலை கடத்தல் வழக்குகளை ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க தடை விதித்து, அது தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதித்தது. ன்.மாணிக்கவேலுக்கு கூடுதலாக ஒரு வருடம் பணி நீட்டிப்பும் வழங்கியது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.     இந்த மனுவை தள்ளுபடி செய்யும்படி கோரி, டிராபிக் ராமசாமி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு வரும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது.
Dinakaran , Feb 16, 2019
கூட்டணி குறித்து விரைவில் முடிவு: பாஜ தேசிய பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் பேட்டி
Dinakaran , Feb 16, 2019
காவல்துறையில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு
Dinakaran , Feb 16, 2019
அதிமுக கூட்டணி ஓரிரு நாளில் முடிவு
சென்னை: அதிமுக கூட்டணி ஓரிரு நாளில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக சார்பில் தேசிய கட்சிகளுடனும், மாநில கட்சிகளுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இன்னும் ஓரிரு நாளில் நல்ல முடிவு வரும். அதிமுகவில் விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்னும் ஒரு சில தினங்களில் நேர்காணல் நடைபெறும். அதன்பிறகு அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். மக்களவை தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் ஆதரவை கேட்பீர்களா? என்று நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளிக்கவில்லை.
Dinakaran , Feb 15, 2019
அமெரிக்காவில் இருந்து நாளை சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்: கூட்டணி குறித்து அறிவிக்க வாய்ப்பு
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த வருடம் டிசம்பர் 18ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டது. இதுகுறித்து தேமுதிக வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த வருடம் டிசம்பர் 18ம் தேதி மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். மேல்சிகிச்சை முடிந்து பூரண நலமுடன் வரும் 16ம் தேதி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு தாயகம் திரும்ப உள்ளார்.முன்னதாக, நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜ உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசி வருவதாகவும், இம்மாத இறுதிக்குள் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் எனவும் தேமுதிக துணைப்பொதுசெயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்தார். அதன்படி நாளை காலை சென்னை திரும்பும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சியினருடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி என்பது குறித்து அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
Dinakaran , Feb 14, 2019
நாட்டின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற வேண்டும்: கே.எஸ்.அழகிரி பேட்டி
Dinakaran , Feb 14, 2019
தமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்: சென்னை வானிலை மையம்
Dinakaran , Feb 14, 2019
மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு ஒரு மாதத்திற்குள் இயக்குநர் நியமிக்கப்படுவார்: அமைச்சர் பாண்டியராஜன்
Dinakaran , Feb 14, 2019