Tamil and Indian Cinema news

Tamil news from around the world!

கமல் பேச்சுக்கு ரஜினிகாந்த் பேட்டி
Dinakaran , May 13, 2019
நடிகர் பார்த்திபன் மீது நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார்
Dinakaran , May 9, 2019
தயாரிப்பாளர் சங்கத்துக்கு நிர்வாக குழு நியமனம்
சென்னை: நடிகர் விஷால் தலைமையில் தயாரிப்பாளர் சங்கம் செயல்பட்டு வந்தது. ஒரு பிரிவு தயாரிப்பாளர்கள் தமிழக அரசிடம் புகார் கொடுத்ததை தொடர்ந்து சங்கத்தை நிர்வகிக்க தமிழக அரசு பதிவுத்துறை அதிகாரி என்.சேகர் என்பவரை தனி அதிகாரியாக நியமித்துள்ளது. தற்போது தனி அதிகாரி சேகர் தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களை கொண்டு தனக்கு உதவி செய்ய தற்காலிக குழு ஒன்றை (அட்ஹாக் கமிட்டி) அமைத்துள்ளார். இதில் பாரதிராஜா, டி.ஜி.தியாகராஜன், கே.ராஜன், டி.சிவா, சிவசக்தி பாண்டியன், எஸ்.வி.சேகர், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், எஸ்.எஸ்.துரைராஜ், கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
Dinakaran , May 8, 2019
நடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: சத்ய பிரதா சாஹு
Dinakaran , Apr 23, 2019
மோகன்லாலுடன் சுரேஷ்கோபி சந்திப்பு
Dinakaran , Apr 22, 2019
நடிகை வீட்டில் ரகளை 4 பேருக்கு வலை
சாத்தான்குளம்:  சாத்தான்குளம் அருகே  கொம்மடிக்கோட்டை அனுக்கிரகபுரம் கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் மகள் எமி (49). இவர்  சிவகாசி,  சிங்கம்-2 மற்றும் இங்கிலீஸ்காரன்,  கயல் உள்ளிட்ட படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார். முன்னாள் மாவட்ட கவுன்சிலர். சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். சாத்தான்குளம் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர், தாசில்தார் மற்றும் உயரதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை எமி வீட்டில் இருந்தபோது அங்கு வந்த 4 பேர் கும்பல்,  சோடா பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர். இதனை தட்டிக்கேட்ட எமியை அந்த கும்பல் அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து எமி அளித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிந்து ரகளை மற்றும் கொலை மிரட்டல் விடுத்த சுகந்தராஜா உட்பட 4 பேரை தேடி வருகின்றார்.
Dinakaran , Apr 21, 2019
2022-ம் ஆண்டில் மீனவர்களின் வருமானம் இரட்டிப்பாகும் :மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
டெல்லி : நதிகள் இணைப்பே தண்ணீர் பிரச்சனைக்கு சரியான தீர்வாக இருக்கும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். சென்னையில் பேட்டி அளித்த அவர், பாஜகவின் நதிகள் இணைப்பு திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்த நடிகர் ரஜினிக்கு நன்றி கூறினார். மேலும் அவர் கூறியது பின்வருமாறு:*பிரதமர் மோடி தலைமையில் அடுத்து அமையும் அரசில், தமிழக பிரதிநிதிகளின் குரல் எதிரொலிக்கும்*2022-ம் ஆண்டில் மீனவர்களின் வருமானம் இரட்டிப்பாகும் *நீட் தேர்வு தேவையில்லை என அதிமுக கூறவில்லை. *நீட் தேர்வை தமிழில் எழுத வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது; அதை ஏற்றுக்கொண்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.
Dinakaran , Apr 12, 2019
பிரதமர் நரேந்திர மோடி திரைப்பட விவகாரம் தேர்தல் ஆணையத்திடம் படக்குழுவினர் விளக்கம்
Dinakaran , Mar 28, 2019
போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு வழக்கு : நடிகர்கள் அஜித், விஜய், சூர்யாவை எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவு
Dinakaran , Mar 7, 2019