News about Coimbatore

Tamil news from around the world!

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அடுத்த மாதம் தேர்தல் பரப்புரை
Dinakaran , Mar 24, 2019
பொள்ளாச்சி விவகாரம் பற்றி வீடியோவுடன் செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபாலை கைது செய்ய போலீஸ் தீவிரம்
Dinakaran , Mar 15, 2019
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது தயவு தாட்சண்யமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: கோவை ஆட்சியர்
Dinakaran , Mar 12, 2019
உடல் தகுதியை பொறுத்து அபிநந்தன் விமானங்களை இயக்க அனுமதிப்பது பற்றி முடிவெடுக்கப்படும்: விமானப்படை தளபதி
கோவை: இந்திய விமானப்படை சிறப்பான திறன் கொண்டது என்று விமானப்படை தளபதி தனோவா கூறியுள்ளார். கோவை சூலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மிக் 21 ரக விமானங்கள் மேம்படுத்தப்பட்டு தாக்குதல் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், உடல் தகுதியை பொறுத்து அபிநந்தன் விமானங்களை இயக்க அனுமதிப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். இந்திய விமானப்படை தாக்குதலில் எத்தனை பேர் இறந்தனர் என்பதை நாங்கள் கணக்கு வைக்கவில்லை, அதனை அரசு தான் விளக்க வேண்டும் என்றும், பாகிஸ்தானில் தாக்க வேண்டிய இலக்கை இந்திய போர் விமானங்கள் தாக்கிவிட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Dinakaran , Mar 4, 2019
மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை
வேளச்சேரி: வேளச்சேரி அடுத்த சித்தாலப்பாக்கம், நாகலட்சுமி நகர், 9வது தெருவில் உள்ள வீட்டின் 2வது மாடியில் இருந்து கீழே குதித்து   பெண்  தற்கொலை செய்து ெகாண்டார். தகவலறிந்த பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். கோவையை  சேர்ந்தவர் திரிசங்கு என்பவர் அங்குள்ள ஓட்டலில் வேலை செய்கிறார். இவரது மகள் ரேஷ்மா தனது சசோதரன் ராகுலுடன் மேற்கண்ட முகவரியில் வசிக்கிறார். அழகு கலை நிபுணரான ரேஷ்மா கோவையில் ஒரு வரை காதலித்ததாகவும், பெற்றோர் எதிர்ப்பால் சில மாதம் முன்பு சென்னைக்கு அனுப்பி வைத்ததும் தெரிந்தது. இந்த காதலுக்கு ராகுல் எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
Dinakaran , Feb 19, 2019
பேனர் விவகாரத்தில் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பை அரசு செய்கிறது : உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி
சென்னை : விதிகள் மீறி வைக்கப்படும் பேனர்கள் குறித்து வழக்குகள், அது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் அதிகரித்து கொண்டே செல்கிறது என்று உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. கோவையில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக அமைச்சர்களை வரவேற்று, கடந்த ஒரு வாரமாக விதிகளை மீறி பேனர் வைக்கப்பட்டதாக டிராபிக் ராமசாமி நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அப்போது நீதிமன்றம் உத்தரவிட்டால்தான் விதிமீறி வைக்கப்பட்ட பேனர்களை அரசு அகற்றுமா? என்றும் விதிமீறல் பேனர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் சாலையில் செல்கிறார்களா, ஹெலிகாப்டரில் பறக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், டிஜிட்டல் பேனர் விவகாரத்தில் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பை தமிழக அரசு செய்து வருவதாகஅதிருப்தி தெரிவித்தனர்.
Dinakaran , Feb 18, 2019
மாசற்ற மின்சார பேருந்துகள்.. பிஎஸ்-6 தரத்திலான பேருந்துகள் .. பட்ஜெட்டில் போக்குவரத்து துறை அறிவிப்புகள்
சென்னை: 2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட் உரையில் பட்டியலிட்டவை பின்வருமாறு :* மாசற்ற மின்சார பஸ்களை போக்குவரத்து துறையில் அறிமுகம் செய்கிறோம் *ஜெர்மன் வளர்ச்சி வங்கி கடன் உதவியுடன் ரூ/ 5890 கோடி செலவில் 12 ஆயிரம் புதிய பிஎஸ்-6 தரத்திலான பேருந்துகள் அறிமுகம் செய்கிறோம் * 2000 மின்சார பஸ்கள் வாங்கி பயன்படுத்தப்படும் திட்டம் செயல்படுத்தப்படும் *500 மின்சார பஸ்கள் சென்னை, மதுரை, கோவையில் முதல்கட்டமாக அறிமுகம் செய்யப்படும் *டீசல் விலை உயர்வால் ஏற்பட்ட நிதி இழப்பை சரி செய்ய போக்குவரத்து கழகங்களுக்கு கூடுதல் நிதி தரப்பட்டது.*போக்குவரத்து துறைக்கு இந்த பட்ஜெட்டில் ரூ. 1297.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Dinakaran , Feb 7, 2019
ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் : ஓ பன்னீர் செல்வம் உரை
சென்னை: 2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட் உரையில் பட்டியலிட்டவை பின்வருமாறு :*ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் *விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ.4 லட்சம் வழங்கப்படும் *சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.14.99 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் *சென்னை, கோவை, மதுரையில் முதல்கட்டமாக 500 மின்சார பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் *ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி வறுமை ஒழிப்பு திட்டங்களுக்காக ரூ.1031 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
Dinakaran , Feb 7, 2019
நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் மார்ச் 2ம் தேதி பாஜக சார்பில் பேரணி: முரளிதரராவ் பேட்டி
கோவை: நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் மார்ச் 2ம் தேதி பாஜக சார்பில் இரு சக்கர வாகன பேரணி நடக்கும்  என தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு தமிழகத்தில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், மேலும் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து, பிப்.10ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி, திருப்பூரில் மக்களை சந்தித்து பேச உள்ளதாக தெரிவித்தார். மேலும் பாஜக அரசு செய்த வளர்ச்சி பணிகளை போல், சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை எந்த அரசும் செய்ததில்லை என கூறினார்.
Dinakaran , Feb 4, 2019