News about Delhi

Tamil news from around the world!

இந்திய தேர்தல் ஆணையத்தில் கருத்து வேறுபாடு என்பது இயல்பே: சுனில் அரோரா விளக்கம்
Dinakaran , May 18, 2019
பிரதமர் பதவிக்கு காங்.உரிமை கோரும் : குலாம் நபி ஆசாத் “பல்டி“
டெல்லி : மத்தியில் ஆட்சி அமைப்பது குறித்த தனது கருத்தை மாற்றிக் கொண்டார் காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார். தேர்தலுக்குப்பின் தேவைப்பட்டால் பிற கட்சித் தலைவர் பிரதமர் ஆக காங். ஆதரவு தரும் என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் பாரதிய ஜனதா கூட்டணியை பதவிக்கு வரவிடாமல் தடுப்பதே தங்கள் லட்சியம் என்றும் காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்தால் தான் 5 ஆண்டுகள் நீடிக்கும் என்றும் கூறினார். பிரதமர் பதவிக்கு, காங்கிரஸ் கட்சி உரிமை கோராது என யாரும் கூற முடியாது என்றும்  குறிப்பிட்டுள்ளார். பாரம்பரிய மிக்க, பழமையான கட்சி காங்கிரஸ் என்றும், 5 ஆண்டுகள் ஆட்சி செய்திட, அதற்கு ஒரு வாய்ப்பு வழங்கிட வேண்டியது அவசியம் என்றும் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
Dinakaran , May 17, 2019
அயோத்தி வழக்கு இன்று விசாரணை
புதுடெல்லி:  உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமி, பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை கடந்த மார்ச் 8ம் தேதி விசாரித்த 5  நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஆராய, மத்தியஸ்தர் குழுவை அமைத்து உத்தரவிட்டது. முன்னாள் நீதிபதி கலிபுல்லா, வாழும்  கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ராம் பஞ்சு ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரும் என உச்ச நீதிமன்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dinakaran , May 9, 2019
ஆளுநர் கிரண்பேடியின் சிறப்பு அதிகாரம் ரத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு
டெல்லி: புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கான சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டு, ஆவணங்களைக் கோருவதற்கு துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை, ரத்து செய்யக் கோரி புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி எம்எல்ஏ லட்சுமி நாராயணன் தொடர்ந்த வழக்கில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு வழங்கிய அதிகாரம் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
Dinakaran , May 8, 2019
அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்
புதுடெல்லி: அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இமயமலை உச்சியில் உள்ள அமர்நாத் குகைக்கோயிலில் பனிலிங்கத்தை தரிசிக்க, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்டுதோறும் பக்தர்கள் புனிதப்பயணம் செல்கின்றனர். இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி  வரை அமர்நாத் யாத்திரை நடைபெற உள்ளது. வழக்கமாக ஜம்மு காஷ்மீரில் கந்தர்பால் மாவட்டத்தில் பகல்காம் மற்றும் பல்தால் பகுதியில் இருந்து யாத்திரை செல்வார்கள்.  இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக ராணுவம், எல்லை பாதுகாப்பு படை, சிஆர்பிஎப் மற்றும் சிஏபிஎப் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
Dinakaran , May 5, 2019
ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும்: மோடி
Dinakaran , May 3, 2019
சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக அதிமுக அதிப்தி எம்எல்ஏக்கள் இருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு
Dinakaran , May 3, 2019
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
டெல்லி: சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொது தேர்வில் மாணவிகள் 2 பேர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். காசியாபாத்தைச் சேர்ந்த ஹன்சிகா சுக்லா மற்றும் முசாபர்நகரைச் சேர்ந்த கரிஷ்மா ஆகியோர் 500 க்கு 499 எடுத்து முதலிடம் பிடித்துள்ளனர். சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொது தேர்வில் மண்டல அளவில் திருவனந்தபுரம் முதலிடம் பிடித்துள்ளது. திருவனந்தபுரம் 98.2%-மும், சென்னை மண்டலம் 92.93%  மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 91.87%  தேர்ச்சியுடன் டெல்லி மண்டலம் 3 வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கிடையே, வெற்றிகரமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து என் இளம் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Dinakaran , May 2, 2019
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொது தேர்வில் மாணவிகள் 2 பேர் முதலிடம் பிடித்து சாதனை
Dinakaran , May 2, 2019
வெயிலால் வாக்குப்பதிவை காலை 5-க்கே தொடங்கலாமே : தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
Dinakaran , May 2, 2019
மோடி அரசுக்கு எதிரான கருத்து தேர்தல் ஆணையம் ராகுலுக்கு நோட்டீஸ்
புதுடெல்லி: பழங்குடியினரை சுடலாம் என மோடி அரசு சட்டம் இயற்றியதாக, மத்தியப் பிரதேசத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 2 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்தியப் பிரசேத மாநிலம் ஷாதோல் பகுதியில் கடந்த மாதம் 23ம் தேதி அன்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல், ‘‘பழங்குடியினருக்காக மோடி அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது. அதில் பழங்குடியினரை சுடலாம் என்ற ஒரு வரி உள்ளது. அவர்கள் உங்கள் நிலத்தை பறிக்கிறார்கள், உங்கள் காடுகளை எடுத்துக் கொள்கிறார்கள், தண்ணீரை எடுக்கிறார்கள். பின்னர் உங்களை சுடலாம் என்கின்றனர்’’ என பேசினார். இது குறித்து பா.ஜ தொண்டர்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து மத்தியப் பிரதேச தேர்தல் அதிகாரிகளிடம் அறிக்கை கேட்கப்பட்டது. அதன்படி ராகுலின் இந்தி பேச்சு, மொழி பெயர்க்கப்பட்டு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டது. இந்த பேச்சு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில் உள்ளதால், இது குறித்து 2 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி ராகுலுக்கு தேர்தல் ஆணையம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.
Dinakaran , May 1, 2019