News about DMK Party

Tamil news from around the world!

சிபிஐ விசாரணையை எதிர்கொண்டுள்ள எடப்பாடி ராஜினாமா செய்ய வேண்டும்: தங்க.தமிழ்ச்செல்வன் பேட்டி
மதுரை: அதிமுகவினர் தினமும் ஆயிரக்கணக்கான சைக்கிள்கள் வழங்க பணம் எங்கிருந்து வந்தது என தங்க.தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் தங்க.தமிழ்ச்செல்வன், திருப்பரங்குன்றம் தொகுதியில் ஓட்டுக்கு 5,000 வீதம் அதிமுக பட்டுவாடா செய்யவுள்ளதாக புகார் தெரிவித்தார். மேலும் சிபிஐ விசாரணையை எதிர்கொண்டுள்ள எடப்பாடி ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கூறினார். தான் நிரபராதி என்று நிரூபித்துவிட்டு எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராகட்டும் என தெரிவித்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் இப்போதும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தான் என்று தங்க.தமிழ்ச்செல்வன் கூறினார்.
Dinakaran , Oct 15, 2018
சி.பி.ஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதல்வர் உடனே பதவி விலகிட வேண்டும் : ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை : சி.பி.ஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சர் உடனடியாக பதவி விலகிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இல்லையேல் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆளுநர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். தனக்குத் தானே நீதிபதியாகிக் கொண்ட முதல்வரை பார்த்து நாடே வெட்கப்பட்டது என்றும் இந்திய முதல்வர்களிலேயே தம் சம்பந்திக்கு ஒப்பந்தங்களை கொடுத்தது எடப்பாடி மட்டும் தான் என்றும் ஸ்டாலின் கூறினார். முன்னதாக நெடுஞ்சாலை ஒப்பந்த விவகாரத்தில் முதலமைச்சர் மீதான புகார் குறித்து சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Dinakaran , Oct 12, 2018
புதிய தலைமை செயலக கட்டட முறைகேடு : தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை
சென்னை : புதிய தலைமை செயலக கட்டட முறைகேடு புகார் விவகாரத்தில்  குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.புதிய தலைமை செயலக கட்டட முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. உயர்நீதிமன்ற தடையால் வழக்குப்பதிவு செய்வது உள்ளிட்ட எந்த நடவடிக்கையிலும் லஞ்ச ஒழிப்புத்துறை ஈடுபட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின் தொடந்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணை 22ன் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Dinakaran , Oct 12, 2018
கே.சி பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்யக்கோரி தேர்தல் ஆணையத்தில் சி.வி. சண்முகம் மனு
Dinakaran , Oct 10, 2018
வைகோ கைது செய்யப்பட்டதை கண்டித்து மதிமுக தொண்டர்கள் தர்ணா போராட்டம்
சென்னை : மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டதை கண்டித்து மதிமுக தொண்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பத்திரிகையாளர், மதிமுக தொண்டர்கள் போராட்டத்தால் சிந்தாரிப்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நக்கீரன் கோபால் மீது வழக்குப்பதிவு செய்ததற்கும், வழக்கறிஞரை பார்க்க அனுமதிக்கக்கோரியும் பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள், மதிமுகவினர் என 20-க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். முன்னதாக நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து சிந்தாதிரிபேட்டை காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ கைது செய்யப்பட்டார்.
Dinakaran , Oct 9, 2018
தமிழக அரசின் கைது நடவடிக்கைகளில் பாஜக தலையிட்டது இல்லை : பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை : தமிழக அரசின் கைது நடவடிக்கைகளில் பாஜக தலையிட்டது இல்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதிமுகவை பின்னால் இருந்து இயக்கும் அவசியம் பாஜகவுக்கு இல்லை என்று கூறிய அவர், நிர்மலா தேவி விவகாரம் வெளிவந்தால் பலரின் அரசியல் வாழ்க்கையே கேள்விக்குறியாகும் என்ற அச்சத்தின் வெளிபாடுதான் இப்படி நடக்கிறதோ என தோன்றுகிறது என்று கூறினார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் கோபால் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலிடம் சிந்தாதிரிபேட்டை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Dinakaran , Oct 9, 2018
நக்கீரன் கோபால் கைதுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம்
Dinakaran , Oct 9, 2018
நக்கீரன் கோபாலை கைது செய்தது பத்திரிகையாளர்களை மிரட்டும் செயல் : வைகோ ஆவேசம்
சென்னை : மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். முன்னதாக நக்கீரன் கோபாலை பார்க்க அனுமதி கேட்டு சிந்தாரிபேட்டை காவல்நிலையத்தில் போலீசுடன் வைகோ வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நக்கீரன் கோபாலை கைது செய்தது பத்திரிகையாளர்களை மிரட்டும் செயல் என்று கூறிய வைகோ, காவல்துறையை இழிவுபடுத்திய நபரை ஆளுநர் மாளிகைக்கு அமைத்து விருந்து ஆளுநர் பன்வாரிலால் வைக்கிறார்  என்றும் நெருக்கடி நிலையை போல விமான நிலையத்தில் வைத்து நக்கீரன் கோபாலை கைது செய்துள்ளனர் என்றும் வைகோ தெரிவித்தார். மேலும் சட்டவிதிகளின்படி வழக்கறிஞர் என்ற முறையில் நக்கீரன் கோபாலை சந்திக்க வந்துள்ளேன் என்றும் நக்கீரன் கோபாலை சந்திக்க போலீசார் அனுமதி தரவில்லையெனில் அவமதிப்பு வழக்கு தொடுப்பேன் என்றும் வைகோ கூறினார்.
Dinakaran , Oct 8, 2018
தினகரன், சசிகலா வெளியேற்றவே ஓ.பி.எஸ் தர்மயுத்தம் தொடங்கியதாக கே.பி.முனுசாமி பேச்சு
Dinakaran , Oct 5, 2018
தமிழ்நாட்டில் 24 இடங்களில் திமுக போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
Dinakaran , Oct 5, 2018
வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் திமுக தொண்டர்கள் ஈடுபட ஸ்டாலின் வேண்டுகோள்
Dinakaran , Oct 5, 2018
திமுக நடத்தும் பொதுக்கூட்டங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க முடியுமா?: உயர்நீதிமன்றம்
Dinakaran , Oct 3, 2018
சபாநாயகர் அவசரகதியில் கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்க கூடாது: ஜெ.அன்பழகன் பேட்டி
Dinakaran , Oct 3, 2018
அமைச்சர் மீதான வழக்கை 23ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்
Dinakaran , Oct 2, 2018
வெளியூர்களில் இருந்து நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்ததால் சென்னையில் போக்குவரத்து முடக்கம்
Dinakaran , Sep 30, 2018
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்து விரைவில் முடிவு செய்வேன்.. விஷால் பரபர!
ThatsTamil , Sep 24, 2018
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க பிரதமருக்கு எம்பி கனிமொழி கடிதம்
Dinakaran , Sep 22, 2018