News about Education

Tamil news from around the world!

கல்லூரி சேர்க்கைக்கு புதிய விதிமுறையை அறிவித்தார் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
Dinakaran , Oct 10, 2018
விழுப்புரம் அருகே பிறந்த நாளின்போது காதலியை சுட்டுக் கொன்ற காதலன் தானும் தற்கொலை..
விழுப்புரம் :  விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த அன்னியூர் கிராமத்தில் பிறந்த நாளின்போது காதலியை சுட்டுக் கொன்ற காதலன் தானும் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமங்கலத்தை சேர்ந்த கார்த்திக்வேல், பேஸ்புக் மூலம், அன்னியூரை சேர்ந்த சரஸ்வதியை காதலித்துள்ளார். மருத்துவக் கல்லூரியில் சரஸ்வதி, 3ஆம் ஆண்டு படித்து வந்த நிலையில், கார்த்திக்வேல், சென்னையில் காவலராக பணியாற்றி வந்தார். முதலில் இருவரும் காதலித்த நிலையில் மருத்துவப் படிப்புக்குப் பிறகு சரஸ்வதியிடம் மாற்றம் என கூறப்படுகிறது. இந்நிலையில் சரஸ்வதியின் பிறந்தநாளான இன்று, வாழ்த்து சொல்ல வந்த கார்த்திக்வேல் சரஸ்வதியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Dinakaran , Oct 9, 2018
நெல்லையில் கல்வி கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி
Dinakaran , Oct 9, 2018
தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க மோடியிடம் கோரினேன் : முதல்வர் பழனிசாமி
டெல்லி : டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.அப்போது தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க மோடியிடம் கோரியதாக கூறினார். ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது என்று கூறிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைக்க கேட்டுக் கொண்டதாகவும் சென்னை மாநகர நிரந்தர வெள்ளத்தடுப்பு மையம் அமைக்க தேவையான ரூ.4445 கோடி வழங்க வலியுறுத்தியதாகவும் எடுத்துரைத்தார்.மேலும் அவர் கூறியதாவது,'ராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க கோரிக்கை வைத்துள்ளேன்;சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆரின் பெயர் வைக்க கோரிக்கை வைத்தேன்;நிதி ஆதாரத்தை பெருக்கி பெட்ரோல் - டீசல் விலையை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்' இவ்வாறு அவர் கூறினார்.
Dinakaran , Oct 8, 2018
சட்ட பேராசிரியர்போட்டித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
Dinakaran , Oct 5, 2018
மின்சார வயரை கடித்த மாணவன் பரிதாப சாவு
பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே உள்ள சென்னீர்குப்பம் செல்வகணபதி நகரை சேர்ந்தவர் மாரி. இவரது மகன் திவாகர் (19). செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆட்டோ மொபைல் பிரிவில் 3ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் திவாகருக்கு பாலிடெக்னிக் கல்லூரி விடுமுறை என்பதால் இவரது வீட்டில் இருந்த வாஷிங் மெஷினில் துணி துவைத்துள்ளார். அப்போது, வாஷிங் மெஷின் சரியாக இயங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து திவாகர், அதை ரிப்பேர் செய்ய முயற்சித்துள்ளார். அப்போது, தவறுதலாக வாஷிங் மெஷினுக்கு செல்லும் மின்வயரை பல்லால் கடித்து இழுத்துள்ளார். இதில் திவாகர் மீது மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Dinakaran , Sep 26, 2018
நாளை காலை 8 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலையில் 3 பேர் கொண்ட குழு ஆய்வு: ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி
Dinakaran , Sep 22, 2018
பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் செப். 3 முதல் தொடக்கம்
சென்னை : அண்ணா பல்கலையின் கீழ் செயல்படும் 509 பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் செப். 3 முதல் தொடங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.பிளஸ்2 தேர்வில் தோல்வியடைந்து சிறப்புத் துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தல் ஆகஸ்ட் 20ம் தேதி முடிந்தது. இதற்காக 9,700 பேர் விண்ணப்பித்தனர். இந்த மாணவர்களுக்கு நேற்று கலந்தாய்வு தொடங்கியது. தரவரிசை அடிப்படையில் நேற்றும், இன்றும் தலா 4 ஆயிரம் பேர் வீதம் மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். துணை கலந்தாய்வில் சீட் தேர்வு செய்த மாணவர்களுக்கு செப்டம்பர் 3-ம் தேதி வகுப்புகள் தொடங்குகிறது.
Dinakaran , Aug 27, 2018
அடிப்படை வசதியில்லாத பொறியியல் கல்லூரிகளை மூட, ஏஐசிடிஇ-க்கு பரிந்துரை செய்வோம் : துணைவேந்தர் சுரப்பா
Dinakaran , Aug 24, 2018