News about Election

Tamil news from around the world!

கூட்டணி குறித்து விரைவில் முடிவு: பாஜ தேசிய பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் பேட்டி
Dinakaran , Feb 16, 2019
அதிமுக கூட்டணி ஓரிரு நாளில் முடிவு
சென்னை: அதிமுக கூட்டணி ஓரிரு நாளில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக சார்பில் தேசிய கட்சிகளுடனும், மாநில கட்சிகளுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இன்னும் ஓரிரு நாளில் நல்ல முடிவு வரும். அதிமுகவில் விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்னும் ஒரு சில தினங்களில் நேர்காணல் நடைபெறும். அதன்பிறகு அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். மக்களவை தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் ஆதரவை கேட்பீர்களா? என்று நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளிக்கவில்லை.
Dinakaran , Feb 15, 2019
உள்ளாட்சி தேர்தலை கண்டு அஞ்சவில்லை, தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக வெற்றி பெறும் : ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்
Dinakaran , Feb 13, 2019
ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2000 வழங்கும் திட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் முறையீடு
சென்னை : ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2000 வழங்கும் திட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. வறுமை கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு ரூ.2000 வழங்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் வகையில் திட்டம் இருப்பதாக மனுவில் செந்தில் குமார் குற்றம் சாட்டியுள்ளார். இதனிடையே 2000 ரூபாய் சிறப்பு நிதி வழங்க தடை கோரிய முறையீடு வழக்காக தாக்கல் செய்யும் பட்சத்தில் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபப்டும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Dinakaran , Feb 12, 2019
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு : சசி தரப்பு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்
Dinakaran , Feb 12, 2019
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு
Dinakaran , Feb 6, 2019
நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் மார்ச் 2ம் தேதி பாஜக சார்பில் பேரணி: முரளிதரராவ் பேட்டி
கோவை: நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் மார்ச் 2ம் தேதி பாஜக சார்பில் இரு சக்கர வாகன பேரணி நடக்கும்  என தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு தமிழகத்தில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், மேலும் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து, பிப்.10ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி, திருப்பூரில் மக்களை சந்தித்து பேச உள்ளதாக தெரிவித்தார். மேலும் பாஜக அரசு செய்த வளர்ச்சி பணிகளை போல், சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை எந்த அரசும் செய்ததில்லை என கூறினார்.
Dinakaran , Feb 4, 2019
மக்களால் உருவாக்க கூடியதுதான் ஜனநாயகம்: தனக்கன்குளம் கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
Dinakaran , Feb 3, 2019
தேசிய கட்சிகள் வந்தாலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
Dinakaran , Feb 3, 2019
விவசாயிகள்,நடுத்தர மக்களை குறிவைக்கும் பட்ஜெட்டை தேர்தல் ஆண்டில் அறிவிப்பது ஏன் ? :திருச்சி சிவா
சென்னை : இது வாக்குகளை குறிவைக்கும் பட்ஜெட். மக்கள் மீதான அக்கறையால் அறிவித்த பட்ஜெட் இல்லை என்று திருச்சி சிவா தெரிவித்துள்ளார். அறிவிப்புகளை நடைமுறைபடுத்த வாய்ப்புகள் இருந்த போது மக்கள் பயன்பெறும் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்று கூறிய அவர், விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்களை குறிவைக்கும் பட்ஜெட்டை தேர்தல் ஆண்டில் அறிவிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும் கடந்த 4 ஆண்டுகளாக தொழிலதிபர்களுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டு, தேர்தலை சந்திப்பதற்கு முன் விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது பாஜக அரசு என்றும் சிவா சாடியுள்ளார்.
Dinakaran , Feb 1, 2019
எம்எல்ஏக்கள் தகுதி இழப்பால் காலியாக உள்ள 18 தொகுதிக்கு தேர்தல் நடத்த தயார்: மாநில தேர்தல் ஆணையம்
Dinakaran , Jan 28, 2019
அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கக் கோரி வழக்கு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
Dinakaran , Jan 24, 2019
குக்கர் சின்னம் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும்: டிடிவி தினகரன் பேட்டி
Dinakaran , Jan 24, 2019
டிடிவி தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னத்தை நிரந்தரமாக வழங்க முடியாது : தேர்தல் ஆணையம்
Dinakaran , Jan 23, 2019
ஜனநாயகத்துக்கு களங்கம் விளைவிக்கவே வாக்கு எந்திர செயல்முறை விளக்கம் செய்யப்பட்டது: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றசாட்டு
புதுடெல்லி: மின்னணு வாக்கு இயந்திரம் பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கமளித்துள்ளார். ஜனநாயகத்துக்கு களங்கம் விளைவிக்கவே வாக்கு எந்திர செயல்முறை விளக்கம் செய்யப்பட்டதாக புகார் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியால் அரங்கேற்றப்பட்ட அரசியல் நாடகம் என்று அமைச்சர் ரவிசங்கர் குற்றம் சாட்டினார். இந்த செயல்முறை விளக்கம் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுவிட்டது என கூறினார். மேலும் வாக்கு எந்திர செயல்முறை விளக்கத்தில் கபில் சிபில் கலந்து கொண்டது ஏன்? என கேள்வி எழுப்பினார். 2014 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு களங்கம் விளைவிக்கவே காங்கிரஸ் முயற்சிப்பதாக தெரிவித்தார்.
Dinakaran , Jan 22, 2019
கிராமசபை கூட்டம் நடத்தி பலத்தை நிரூபிக்க பாஜக தயாரா? முத்தரசன் கேள்வி
சென்னை: கிராமசபை கூட்டம் நடத்தி பலத்தை நிரூபிக்க பாஜக தயாரா என்று முத்தரசன் கேள்வியெழுப்பியுள்ளார். முடிந்தால் பாஜக கிராம சபை கூட்டம் நடத்தட்டும்; பாஜக பலத்தை பொன்.ராதாகிருஷ்ணன் பார்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். குட்டி ஜப்பான் என பெயர் பெற்ற சிவகாசி தற்போது குப்பை ஜப்பானாக மாறிவிட்டதாகவும், தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தினால் உள்ளாட்சி தேர்தல் நடத்த அரசுக்கு அச்சம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தமிழக மக்கள் மீது அக்கறை இருந்தால் மத்திய அரசை வலியுறுத்தி தமிழிசை நிவாரண நிதி வாங்கித் தந்திருக்கலாம் எனவும் முத்தரசன் கூறியுள்ளார்.
Dinakaran , Jan 18, 2019