News about Erode

Tamil news from around the world!

பட்டுக்கூடு கிலோ 376க்கு விற்பனை
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், பட்டு வளர்ச்சித்துறை சார்பில் பட்டுக்கூடு ஏல அங்காடி இயங்கி வருகிறது. இந்த அங்காடிக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட  விவசாயிகள், பட்டுக்கூடுகளுடன் வந்து தினமும் ஏலத்தில் கலந்து கொள்கின்றனர். தினந்தோறும் 2 டன் அளவு பட்டுக்கூடு வரத்து காணப்படுகிறது.  தற்போதைய வெப்பநிலை சாதகமாக நிலவுவதால், பட்டுக்கூடு வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், விவசாயிகளுக்கு ரொக்கமாக வழங்காமல், அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்துவதால்,   பறக்கும்படையினரால் பணம் பறிமுதல் ஆகுமோ என்ற அச்சம் இல்லை. இதனால், தர்மபுரி பட்டுக்கூடு அங்காடிக்கு, விவசாயிகள் தொடர்ந்து பட்டுக்கூடுகளை கொண்டு வருகின்றனர். நேற்று, மொத்தம் 3 டன் பட்டுக்கூடு வந்தது.  வெண்பட்டுக்கூடுக்கு அதிகபட்சமாக கிலோ ₹376 எனவும், குறைந்தபட்சமாக ₹201 எனவும், சராசரி விலை ₹341 எனவும் விலை கிடைத்தது.
Dinakaran , Apr 1, 2019
மக்களவைத் தேர்தல் 2019 : மதிமுக ஈரோடு தொகுதியில் போட்டி
சென்னை : மக்களவைத் தேர்தலில் மதிமுக ஈரோடு தொகுதியில் போட்டியிட உள்ளது. மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் - 10,மதிமுக - 2, இந்திய கம்யூனிஸ்ட்-2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 2, விடுதலை சிறுத்தைகள்- 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- 1, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்- 1 ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு எட்டப்பட்டுள்ளது. தொகுதிகள் ஒதுக்கப்படா விட்டாலும், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
Dinakaran , Mar 15, 2019
விக்கிரவாண்டி - தஞ்சாவூர் 4 வழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
Dinakaran , Mar 6, 2019
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் : ஈ.வி.கே.எஸ் பேட்டி
Dinakaran , Feb 4, 2019
தா.பாண்டியன் மீது ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் புகார்
ஈரோடு: தமிழ்நாடு கோவம்ச ஆண்டிப்பண்டாரத்தார்  சமூக முன்னேற்ற நலச்சங்கத்தின் மாநில தலைவர் பிரகாசம் தலைமையில்  நிர்வாகிகள் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில்   கூறியிருப்பதாவது: பண்டார சமுதாய மக்கள் தமிழகத்தில் சுமார் 50 லட்சம் பேர்  வாழ்ந்து வருகின்றனர். கடந்த மாதம் 26ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் மூத்த  தலைவர் நல்லகண்ணு பிறந்தநாள் விழாவில் தேசிய குழு  உறுப்பினர் தா.பாண்டியன், சாமியார்களும், பண்டாரங்களும் நம்மை பழையபடி  பண்டாரமாக்க முயற்சிக்கிறார்கள் என பேசியுள்ளார். இது எங்கள் சமுதாய  மக்களின் மனத்தை புண்படுத்தி உள்ளதோடு இழிவுபடுத்தும் வகையில்  உள்ளது. எனவே அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும்.  இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Dinakaran , Jan 7, 2019