News about Jayalalithaa

Tamil news from around the world!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை : உச்சநீதிமன்றம்
Dinakaran , Apr 26, 2019
கோடநாடு விவகாரம் குறித்து முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
Dinakaran , Apr 16, 2019
கர்நாடகாவில் மேகதாது அணை கட்டும் பணிக்கு மணல் அனுப்புகிறார் ஓபிஎஸ் மகன்: ஈவிகேஎஸ்.இளங்கோவன் குற்றச்சாட்டு
தேனி: தேனி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தேனியில் நேற்று அளித்த பேட்டி:தேனியில் பிரதமர் மோடி கூட்டத்திற்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெர்மிட் இல்லாமல் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து விதியை மீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனிடம் புகார் அளிக்க உள்ளோம். என்னை வெளியூரில் இருந்து வந்து தேனியில் போட்டியிடுவதாக மோடி கூறுகிறார். எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் எங்கிருந்து வந்து ஆண்டிபட்டியில் போட்டியிட்டார்கள்? குஜராத்திலிருந்து தற்போது உத்தரபிரதேசத்தில்  மோடி போட்டியிடவில்லையா? இந்திய ஒருமைப்பாட்டை குலைக்கும் வகையில் மோடி பேசுவது ஜனநாயகத்திற்கு கேடு.மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்று ராகுல்காந்தி கூறவே இல்லை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியை பொறுத்தவரை அந்தந்த மாநில பிரச்னைகளில் தலையிடாது. அப்படி ராகுல் கூறியிருப்பதை நிரூபித்தால் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளேன். தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான தேனி வேட்பாளர் ரவீந்திரநாத்குமார், கர்நாடகாவில்  மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டில் இருந்து மணல் அனுப்பி பணம் சம்பாதிக்கிறார். மற்ற பகுதிகளில் பண மழை பொழிகிறது. தேனியில் அதிமுக வேட்பாளர் மூலம்  பண சுனாமியே அடிக்கிறது. எந்த சுனாமியையும் வெல்லும் திறன் எங்களிடம்  உள்ளது. சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறும் 22 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.
Dinakaran , Apr 14, 2019
மருத்துவ குழு அமைக்கக் கோரிய வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து அப்போலோ நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
Dinakaran , Apr 9, 2019
சிறப்பு மருத்துவர் குழு அமைக்க வேண்டும் என்ற அப்பல்லோ கோரிக்கை நிராகரிப்பு: உயர்நீதிமன்றம்
Dinakaran , Apr 3, 2019
கொடநாடு கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உதகை நீதிமன்றத்தில் ஆஜர்
ஊட்டி: கொடநாடு கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017ம் தேதியன்று, காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி கனகராஜ் சாலை விபத்தில் இறந்தார். சயான் உட்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில்  நடந்து வருகிறது. வழக்கில் 10 பேரும் ஜாமீன் பெற்று நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர். இந்நிலையில், சயான் மற்றும் மனோஜ் ஆகியோர்  டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்து, கொடநாடு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு உள்ளது என தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரையும் தமிழக போலீசார் கைது செய்தனர்.  பின்னர், 2 பேரின்  ஜாமீன் மனுவை ரத்து செய்ய வேண்டும் என ஊட்டி நீதிமன்றத்தில் அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது சயான், மனோஜ் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து, நீதிபதி வடமலை, ஜாமீனை ரத்து செய்து  பிடிவாரன்ட்  பிறப்பித்தார். ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் பிப்ரவரி 25ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்தது. அதன்பின்னர் எவ்வித உத்தரவும் வழங்கப்படாத நிலையில், 2 பேரும் கேரளாவில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து நீலகிரி போலீசார், கேரளாவுக்கு சென்று சயான், மனோஜ் ஆகியோரை நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் இன்று ஊட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
Dinakaran , Mar 2, 2019
ஜெயலலிதா பிறந்தநாளுக்கு பேனர்கள் வைக்க அனுமதி கோரிய அதிமுக முன்னாள் எம்.பி. பாலகங்காவின் மனு நிராகரிப்பு
சென்னை : ஜெயலலிதா பிறந்தநாளுக்கு பேனர்கள் வைக்க அனுமதி கோரிய அதிமுக முன்னாள் எம்.பி. பாலகங்காவின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் அமர்வு மனுவை நிராகரித்தது  அரசியல் கட்சிகள் பேனர்கள் வைக்கக்கூடாது என்ற உத்தரவை மாற்றியமைக்க மறுத்த உயர்நீதிமன்றம், தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் அதிமுக வைக்கும் பேனர்களுக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று கூறிய நீதிமன்றம், சட்டவிரோத பேனர்கள் அகற்றுவது மட்டுமல்ல, அவற்றை தடுப்பதும் அரசின் கடமை என்று கூறினர்.  
Dinakaran , Feb 13, 2019
மும்முறை செங்கோலை தன்னிடம் வழங்கி முதல்வராக்கிய ஜெயலலிதா தனது குலதெய்வம் :ஓ பன்னீர் செல்வம் புகழாரம்
Dinakaran , Feb 7, 2019
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடு முடக்கப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை தகவல்
சென்னை : ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடு முடக்கப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது.  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் ரூ. 16.75 கோடி வரி பாக்கிக்காக 2007ம் ஆண்டு முதல் முடக்கப்பட்டுள்ளது என்றும் முடக்கப்பட்டுள்ள 4 சொத்துக்களில் ஐதராபாத்தில் உள்ள திராட்சைத் தோட்டமும் அடங்கும் என்றும் வருமான வரித்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை அரசு இல்லம் ஆக்குவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ட்ராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் வருமானவரித்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
Dinakaran , Jan 24, 2019
அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையை மறைத்தது சசிகலா குடும்பம்தான் : அதிமுக எம்.பிக்கள் புகார்
Dinakaran , Jan 6, 2019