News about Kamal Haasan

Tamil news from around the world!

அரவக்குறிச்சி தொகுதியில் கமலின் சர்ச்சை பேச்சு குறித்து அறிக்கை கேட்டது தேர்தல் ஆணையம் : சத்ய பிரத சாஹு
Dinakaran , May 17, 2019
தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் : முதலமைச்சர் பழனிசாமி
Dinakaran , May 17, 2019
சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு கமல்ஹாசனை அழைக்காததற்கு கே.எஸ்.அழகிரி விளக்கம்
Dinakaran , May 16, 2019
கமல்ஹாசன் மீது செருப்பு வீச்சு : திருநாவுக்கரசர் கண்டனம்
Dinakaran , May 16, 2019
கடந்த இரண்டு நாட்களாக பிரசாரத்தை ரத்து செய்த கமல் இன்று பிரசாரம் செய்கிறார்
திருப்பரங்குன்றம்: கடந்த இரண்டு நாட்களாக பிரசாரத்தை ரத்து செய்த கமல் இன்று பிரசாரம் செய்கிறார். கொடைக்கானலில் இருந்து புறப்பட்ட கமல், திருப்பரங்குன்றத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். திருப்பரங்குன்றம் - தோப்பூர், பெரியார் நகர், சமநாதம், பனையூர் உள்ளிட்ட இடங்களில் கமல் பிரசாரம் செய்கிறார். கமல் பிரசாரம் குறித்து மக்கள் நீதி மய்யம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்து தீவிரவாதம் என்ற சர்ச்சை பேச்சு காரணமாக கடந்த 2 நாட்களாக தனது பிரசாரத்தை கமல் ரத்து செய்திருந்தார். நாளை அரவக்குறிச்சியில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் கமல் பங்கேற்கிறார் என மக்கள் நீதி மய்யம் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் கூறியுள்ளார்.
Dinakaran , May 14, 2019
கமல் பேச்சுக்கு ரஜினிகாந்த் பேட்டி
Dinakaran , May 13, 2019
சூலூர் சட்டமன்ற தொகுதியில் கமல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க கோரி கோவை ஆட்சியரிடம் மனு
கோவை: சூலூர் சட்டமன்ற தொகுதியில் கமல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்ய உறுப்பினர் பாலமுருகன் என்பவரின் மனைவி, கமலுக்கு எதிராக ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். பல்லடம் மக்கள் நீதி மய்ய கட்சி அலுவலகத்தில் ஏப்.18ம் தேதி பாலமுருகன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கணவர் பாலமுருகனின் உயிரிழப்புக்கு கமல்ஹாசன் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்று மனைவி குற்றம்சாட்டியுள்ளார். தமது கணவருக்கு ஏற்பட்ட நிலை சூலூர் மக்களுக்கு ஏற்படக்கூடாது என்பதால் கமல் பிரச்சாரத்துக்கு தடை கேட்பதாக பாலமுருகன் மனைவி விளக்கமளித்துள்ளார்.
Dinakaran , May 9, 2019
வெற்றி தொடரட்டும் : பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கமல்ஹாசன் ட்விட்டரில் வாழ்த்து
Dinakaran , Apr 19, 2019
இந்தியாவை வழிநடத்துவது என் கனவு, தமிழகம் முதல் மாநிலமாக திகழ வேண்டும்: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு
கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதிக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கையை கமல் வெளியிட்டார். இந்தியாவை வழிநடத்துவது என் கனவு எனவும், தமிழகம் முதல் மாநிலமாக திகழ வேண்டும் எனவும் குறிப்பிட்டார். புதிதாக தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டு, ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் எனவும், கைத்தறி பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை விலக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படும் எனவும் அறிக்கையில் கூறினார். நவீன உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள், சேகரிப்பு மையங்கள், குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்குகள் கொண்ட பிரமாண்ட உணவுப்பூங்கா உருவாக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
Dinakaran , Apr 7, 2019
விவசாய கடனை தள்ளுபடி செய்வதை தவிர்த்து வேறு ஏதும் மாற்று திட்டம் பாஜகவிடம் உள்ளதா?: கே.எஸ் அழகிரி கேள்வி
Dinakaran , Feb 11, 2019
தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் பிரகாஷ்ராஜுக்கு கமல்ஹாசன் வாழ்த்து
சென்னை: மத்திய, மாநில அரசுகளை கடுமையாக எதிர்த்து கருத்து தெரிவித்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், வரும் பாராளுமன்ற தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாக, நேற்று  முன்தினம் அறிவித்தார். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் அவருக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், நேற்று தனது டிவிட்டரில், ‘’உங்கள் அரசியல் பயணத்துக்கு என் வாழ்த்துகள். இதன்மூலம் அனைவரையும் பேச வைத்திருக்கிறீர்கள்’’ என்று  கருத்து தெரிவித்துள்ளார்.
Dinakaran , Jan 6, 2019