News about Madurai

Tamil news from around the world!

திருப்பதி கோவில் தங்கும் விடுதிகளை பராமரிப்பது போல் தமிழகத்தில் உள்ள கோவில்களை ஏன் பராமரிப்பதில்லை? உயர்நீதிமன்ற கிளை
Dinakaran , Feb 19, 2019
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பொருட்களை கால வயதை அறியும் கார்பன் பரிசோதனைக்கு அனுப்ப தொல்லியல் துறைக்கு உத்தரவு
Dinakaran , Feb 18, 2019
சமூக செயற்பாட்டாளர் முகிலன் மீதான ஆட்கொணர்வு மனு : காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை : சமூக செயற்பாட்டாளர் முகிலனை கண்டுபிடிக்கக்கோரிய வழக்கில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் போலீஸ் பிப்ரவரி 22ல் நேரில் ஆஜராகி பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை; சென்னை மாநகர காவல் ஆணையர், காஞ்சிபுரம், விழுப்புரம் எஸ்.பிக்கள் விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க செயற்பாட்டாளர் முகிலனை கண்டுபிடிக்கக்கோரிய ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது. ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள்' என்ற வீடியோவை வெளியிட்ட அடுத்தநாள் முகிலன் காணாமல் போனார். பிப்.15 இரவு 11.50க்கு மதுரைக்கு செல்வதாக சென்ற முகிலன் திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Dinakaran , Feb 18, 2019
கடந்த 5 ஆண்டுகளில் தொல்லியல் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது : மத்திய அரசுக்கு நீதிமன்றம் கேள்வி
Dinakaran , Feb 18, 2019
அரசு - தனியார் ஊழியர்களுக்கு இடையே ஊதியத்தில் பெரும் பாகுபாடு இருப்பது ஏன்?: நீதிபதி கேள்வி
மதுரை: ஜாக்டோ- ஜியோ வழக்கு விசாரணையின் போது அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார். அரசு - தனியார் ஊழியர்களுக்கு இடையே ஊதியத்தில் பெரும் பாகுபாடு இருப்பது ஏன்? என உயர்நீதிமன்ற நீதிபதி  கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து, அரசு ஊழியர்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டால் என்ன? என்றும், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ பொறியியல் கல்லூரி படிப்பில் முன்னுரிமை தரலாமா? என்றும் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார். உரிமைக்காக போராடும் அரசு ஊழியர்கள் தங்களது கடமையிலும் கவனத்தை செலுத்த வேண்டும் என கருத்து தெரிவித்தார்.
Dinakaran , Feb 18, 2019
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் சுப்ரமணியன் உடல் மதுரை வந்தது: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அஞ்சலி
Dinakaran , Feb 16, 2019
ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி முடிவுகளை வெளியிடாத தொல்லியல்துறை செயல் கண்டிக்கத்தக்கது : உயர்நீதிமன்ற கிளை
Dinakaran , Feb 15, 2019
தமிழ் பழமையானது என்பதற்கு சான்றாக விளங்கும் அடையாளங்களை அரசு பராமரிக்காதது வேதனையளிக்கிறது : நீதிபதிகள்
Dinakaran , Feb 15, 2019
பட்டாலியன் போலீசார் 2 பேர் தற்கொலை
மதுரை: மதுரை மாவட்டம், பேரையூர் அருகே சாப்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமர் (32). இவர் கடந்த 2011ல் போலீஸ் வேலைக்கு சேர்ந்தார். மனைவி ஆனந்தம். 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மதுரை பட்டாலியனில் பணியாற்றி வந்த ராமர், அங்குள்ள குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். சமீபத்தில் ஏட்டாக பதவி உயர்வு பெற்ற ராமர், அதற்கான பயிற்சியில் இருந்தார். நேற்று அதிகாலை ராமர் பயிற்சிக்கு வரவில்லை. சக போலீசார் அவரது அறைக்கு சென்று பார்த்தபோது, அங்கு அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர். இதேபோல நேற்று முன்தினம் உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டியை சேர்ந்த பட்டாலியன் போலீஸ் சதீஸ்(23) தற்கொலை செய்து கொண்டார்.
Dinakaran , Feb 14, 2019
தமிழகத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப போலீசார் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா? : நீதிமன்றம் கேள்வி
Dinakaran , Feb 13, 2019
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் திருவள்ளுவரின் புகழை நிலைநாட்ட வேண்டும்: நீதிபதிகள் கருத்து
Dinakaran , Feb 11, 2019
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளூர் சிலை பராமரிப்பு தொடர்பாக அறிக்கை தர ஐகோர்ட் கிளை ஆணை
Dinakaran , Feb 11, 2019
கள்ளத்துப்பாக்கி விற்பனை வழக்கு : மத்திய உள்துறை செயலர், என்ஐஏ, சிபிஐ பதிலளிக்க உத்தரவு
Dinakaran , Feb 8, 2019
மாசற்ற மின்சார பேருந்துகள்.. பிஎஸ்-6 தரத்திலான பேருந்துகள் .. பட்ஜெட்டில் போக்குவரத்து துறை அறிவிப்புகள்
சென்னை: 2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட் உரையில் பட்டியலிட்டவை பின்வருமாறு :* மாசற்ற மின்சார பஸ்களை போக்குவரத்து துறையில் அறிமுகம் செய்கிறோம் *ஜெர்மன் வளர்ச்சி வங்கி கடன் உதவியுடன் ரூ/ 5890 கோடி செலவில் 12 ஆயிரம் புதிய பிஎஸ்-6 தரத்திலான பேருந்துகள் அறிமுகம் செய்கிறோம் * 2000 மின்சார பஸ்கள் வாங்கி பயன்படுத்தப்படும் திட்டம் செயல்படுத்தப்படும் *500 மின்சார பஸ்கள் சென்னை, மதுரை, கோவையில் முதல்கட்டமாக அறிமுகம் செய்யப்படும் *டீசல் விலை உயர்வால் ஏற்பட்ட நிதி இழப்பை சரி செய்ய போக்குவரத்து கழகங்களுக்கு கூடுதல் நிதி தரப்பட்டது.*போக்குவரத்து துறைக்கு இந்த பட்ஜெட்டில் ரூ. 1297.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Dinakaran , Feb 7, 2019
ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் : ஓ பன்னீர் செல்வம் உரை
சென்னை: 2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட் உரையில் பட்டியலிட்டவை பின்வருமாறு :*ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் *விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ.4 லட்சம் வழங்கப்படும் *சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.14.99 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் *சென்னை, கோவை, மதுரையில் முதல்கட்டமாக 500 மின்சார பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் *ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி வறுமை ஒழிப்பு திட்டங்களுக்காக ரூ.1031 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
Dinakaran , Feb 7, 2019
ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் அமைக்க கோரிய வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு
Dinakaran , Feb 7, 2019
மக்களால் உருவாக்க கூடியதுதான் ஜனநாயகம்: தனக்கன்குளம் கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
Dinakaran , Feb 3, 2019
டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரத்துக்கு எதிராக உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு
Dinakaran , Jan 31, 2019
கொடைக்கானலில் விதிமீறய கட்டிடங்கள் மீது நடவடிக்கை தொடர உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
Dinakaran , Jan 31, 2019
மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயிலிலில் அறங்காவலர் குழு முறைகேடு : விசாரணையில் அம்பலம்
Dinakaran , Jan 31, 2019
கஜா புயலால் வீடு இழந்தவர்களுக்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகட்ட நிதி ஒதுக்க வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி மனு
Dinakaran , Jan 27, 2019
தமிழகத்துக்கு நாசத்துக்கு மேல் நாசம் செய்கிறது பாஜக: வைகோ குற்றச்சாட்டு
Dinakaran , Jan 27, 2019
மதுரை பெரியார் பேருந்து நிலைய பணிகள் ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பு : மாநகராட்சி ஆணையர்
மதுரை : மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை நவீனப்படுத்தும் பணிகள் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரையில் பல்வேறு இடங்களில் நவீனப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பெரியார் பேருந்து நிலையத்தை நவீன பேருந்து நிலையமாக மாற்ற முடுவு செய்யப்பட்டது. மதுரையில் அடையாளங்களில் ஒன்றான 48 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த பேருந்து நிலையம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.344 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 20ம் தேதி துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பேருந்து நிலையத்தை நவீனப்படுத்தும் பணிகள் இன்று முதல் நடைபெறும் என கூறப்பட்டது. இதன் காரணமாக பேருந்து நிலையம் மூடப்படும் என்றும் மாநகராட்சி சார்பில் அறிவித்திருந்தனர். இந்நிலையில் பேருந்து நிலையத்தை நவீனப்படுத்தும் பணிகள் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 27ம் தேதி தமிழகம் வரவுள்ளார். இதன் காரணமாக பேருந்து நிலையத்தை நவீனப்படுத்தும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பெரியார் பேருந்து நிலையம் என்ற பெயர் மாற்றப்படாது என்றும் மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.
Dinakaran , Jan 23, 2019