News about M.K. Stalin

Tamil news from around the world!

அரசு மருத்துவமனையில் அப்பாவி மக்கள் உயிரிழக்க காரணமான சுகாதாரத்துறைக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
Dinakaran , May 8, 2019
4 சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து மே 1ம் தேதி முதல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்
Dinakaran , Apr 20, 2019
தமிழகத்தில் காவல்துறை அலட்சியத்தால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
Dinakaran , Apr 19, 2019
பணம் கொடுத்தாலும் தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறாது...மக்கள் சரியான முடிவை தருவார்கள்: மு.க.ஸ்டாலின் உறுதி
சென்னை: ஆளுங்கட்சியினர் கோடிக்கோடியாய் பணம் கொடுத்தாலும் மக்கள் அவர்களுக்கு ஆதரவாக வாக்களிக்கமாட்டார்கள் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மத்தியில் உள்ள ஆட்சியையும் மாநிலத்தில் உள்ள ஆட்சியையும் இகற்ற மக்கள் உறுதி பூண்டுள்ளனர். அச்சுறுத்தவதற்காகவே வேலூர் மக்களவை தேர்தலை ரதது செய்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார். மேலும், பணம் கொடுத்தாலும் தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறாது. மக்களவை தேர்தலில் மக்கள் சரியான முடிவை தருவார்கள். வருமானவரி சோதனை போன்ற எந்த மிரட்டலுக்கும் திமுன பயப்படாது. பணத்துக்கு அடிமையாகாமல் மக்கள் வாக்களிக்க உள்ளனர் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
Dinakaran , Apr 16, 2019
கோடநாடு விவகாரம் குறித்து முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
Dinakaran , Apr 16, 2019
கர்நாடகாவில் மேகதாது அணை கட்டும் பணிக்கு மணல் அனுப்புகிறார் ஓபிஎஸ் மகன்: ஈவிகேஎஸ்.இளங்கோவன் குற்றச்சாட்டு
தேனி: தேனி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தேனியில் நேற்று அளித்த பேட்டி:தேனியில் பிரதமர் மோடி கூட்டத்திற்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெர்மிட் இல்லாமல் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து விதியை மீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனிடம் புகார் அளிக்க உள்ளோம். என்னை வெளியூரில் இருந்து வந்து தேனியில் போட்டியிடுவதாக மோடி கூறுகிறார். எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் எங்கிருந்து வந்து ஆண்டிபட்டியில் போட்டியிட்டார்கள்? குஜராத்திலிருந்து தற்போது உத்தரபிரதேசத்தில்  மோடி போட்டியிடவில்லையா? இந்திய ஒருமைப்பாட்டை குலைக்கும் வகையில் மோடி பேசுவது ஜனநாயகத்திற்கு கேடு.மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்று ராகுல்காந்தி கூறவே இல்லை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியை பொறுத்தவரை அந்தந்த மாநில பிரச்னைகளில் தலையிடாது. அப்படி ராகுல் கூறியிருப்பதை நிரூபித்தால் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளேன். தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான தேனி வேட்பாளர் ரவீந்திரநாத்குமார், கர்நாடகாவில்  மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டில் இருந்து மணல் அனுப்பி பணம் சம்பாதிக்கிறார். மற்ற பகுதிகளில் பண மழை பொழிகிறது. தேனியில் அதிமுக வேட்பாளர் மூலம்  பண சுனாமியே அடிக்கிறது. எந்த சுனாமியையும் வெல்லும் திறன் எங்களிடம்  உள்ளது. சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறும் 22 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.
Dinakaran , Apr 14, 2019
தமிழகத்தில் கொடுமையான ஆட்சி, மத்தியில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது : ஸ்டாலின் விமர்சனம்
சேலம் : சேலம் சீலநாயக்கன்பட்டியில் ஒரே மேடையில் ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் திமுக வேட்பாளர் எஸ்.ஆர். கார்த்திகேயனை ஆதரித்தும் கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் பொன். கவுதம சிகாமணியை ஆதரித்தும் ஸ்டாலின் பரப்புரை நிகழ்ச்சி வருகிறார். அப்போது பேசிய ஸ்டாலின், அடுத்த பிரதமர் ராகுல் என்று நான் அறிவித்த அறிவிப்புக்கு தற்போது ஆதரவு பெருகி வருவதாக கூறினார். மேலும் நாடும் நமதே நாற்பதும் நமதே என்ற ராகுலுக்கு ஸ்டாலின் உறுதிமொழி அளித்தார். மேலும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ; பாஜகவின் தேர்தல் அறிக்கை ஜீரோ என்றும் திராவிட இயக்கத்தின் எண்ணங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பிரதிபலிக்கப்பட்டிருக்கிறது என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார். *தமிழகத்தில் கொடுமையான ஆட்சி, மத்தியில் சர்வாதிகார ஆட்சி நடப்பதாகவும் ஸ்டாலின் விமர்சித்தார். *ஏழைத் தாயின் மகனின் ஆட்சியில், விஜய் மல்லையா, நிரவ் மோடி கோடி கோடியாக கொள்ளையடித்து செல்வதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார். *பிரதமராக இருக்க கூடிய மோடி காவலாளி அல்ல களவாணி என்று சேலத்தில் ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.
Dinakaran , Apr 12, 2019
ரெய்டு பயமுறுத்தலுக்கு எல்லாம் திமுக என்றைக்கும் அஞ்சாது : மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை : ரெய்டு பயமுறுத்தலுக்கு எல்லாம் திமுக என்றைக்கும் அஞ்சாது என்று வேலூர் காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பணவிநியோகத்தை தடுக்க நினைத்தால் பிரதமரின் தலைமையில் சுதந்திர அமைப்புகள் இயங்க கூடாது என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் நேரடிப் பார்வையில் சுதந்திரமான அமைப்புகள் செயல்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறினார். மேலும் ஸ்டாலின் கூறியதாவது,'அதிமுக கூட்டணி படுதோல்வியடையும் என்ற சர்வே முடிவுகளால் மோடிக்கு எரிச்சல், ஏமாற்றம்; பிரதமர் மோடியே வருமானவரித்துறை ரெய்டுக்கு உத்தரவிட்டுள்ளார்; பாசிஸ்ட் பாய்ச்சல், சேடிஸ்ட் சேட்டையை பார்த்து திமுக ஒருக்காலும் ஓய்ந்துவிடாது,' என்றார்.
Dinakaran , Mar 30, 2019
மானம்காத்த மருதுசகோதரர்கள் மண்ணிற்கு வாக்கு கேட்டு வந்துள்ளேன்: சிவகங்கையில் மு.க.ஸ்டாலின் பேச்சு
Dinakaran , Mar 29, 2019
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழக மக்களின் சுக துக்கத்தில் பங்கேற்கும் இயக்கம் திமுக: அரூர் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு
Dinakaran , Mar 23, 2019
மக்களவை தேர்தல் 2019: ராமநாதபுரத்தில் முஸ்லீம் லீக் சார்பில் நவாஸ் கனி போட்டி
Dinakaran , Mar 15, 2019
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் பெரிய அளவில் பிரச்சாரம் நடத்தும்: மு.க.ஸ்டாலின் பேட்டி
சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் பெரிய அளவில் பிரச்சாரம் நடத்தும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக, எம்.பி., எம்.எல்.ஏக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், 40 மக்களவை தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்தார். ஊராட்சி சபை மூலம் ஏற்கனவே திமுக பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது என தெரிவித்தார். இதையடுத்து 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை தள்ளிவைத்ததில் உள்நோக்கம் உள்ளது என அவர் கூறியுள்ளார். மேலும் 2 நாட்களில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Dinakaran , Mar 11, 2019
திமுகவுக்கு மேலும் பல அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளது: மு.க.ஸ்டாலின் பேட்டி
சென்னை: திமுகவுக்கு மேலும் பல அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுகவுக்கு ஆதரவு அளிக்கும் அமைப்புகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த பல்வேறு கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் தொகுதி ஒதுக்கீடு குறித்து காங்கிரசுடன் நாளை பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் கட்சி குழு அமைத்தவுடன் திமுக குழு பேச்சுவார்த்தை நடத்தும் என தெரிவித்தார். மேலும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் 2 அல்லது 3 நாளில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
Dinakaran , Mar 7, 2019
காவல்துறையில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு
Dinakaran , Feb 16, 2019
செம்மொழி தமிழாய்வு நிறுவனம் முற்றிலும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது: பேரவையில் மு.க.ஸ்டாலின் பேச்சு
Dinakaran , Feb 14, 2019
மக்களால் உருவாக்க கூடியதுதான் ஜனநாயகம்: தனக்கன்குளம் கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
Dinakaran , Feb 3, 2019
ரஃபேல் போர் விமான பேரம் பற்றி நாடாளுமன்றக் குழு விசாரிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியறுத்தல்
Dinakaran , Jan 20, 2019
முதல்வர் ஆவதற்குத்தான் தலைமை செயலகத்தில் ஓபிஎஸ் யாகம் நடத்தியிருக்கிறார்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
Dinakaran , Jan 19, 2019
2-வது சுதந்திர போராட்டத்திற்காக கொல்கத்தாவில் அனைத்து எதிர்கட்சிகளும் கூடியுள்ளது : மு.க.ஸ்டாலின்
கொல்கத்தா: விவேகானந்தருக்கு நினைவு இல்லம் கட்டிய மாநிலம் தமிழ்நாடு என்று கொல்கத்தா பேரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். மு.க.ஸ்டாலின் வங்க மொழியில் உரையை தொடங்கி பிறகு தமிழில் பேச ஆரம்பித்தார். கொல்கத்தா - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை நம்மை இணைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். அரசியல், ஆண்மீகம், இலக்கியத்தில் தமிழகத்துக்கும் வங்கத்துக்கும் தொடர்பு உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மம்தா பானர்ஜி இரும்பு கெண்மணி என்று புகழாரம் சூட்டினார் மு.க.ஸ்டாலின். மேலும் பேசிய அவர் 2-வது சுதந்திர போராட்டத்திற்காக கொல்கத்தாவில் அனைத்து எதிர்கட்சிகளும் கூடியுள்ளதாக தெரிவித்தார்.
Dinakaran , Jan 19, 2019
அதிமுக அரசு மக்களின் பிரச்சனைகளை புரிந்துகொள்ளாமல் அரசு வருவாயில் கவனம் செலுத்துகிறது: கனிமொழி
Dinakaran , Jan 18, 2019
அமமுகவினர் திமுகவில் இணைந்தனர்
Dinakaran , Jan 11, 2019
ஸ்டெர்லைட் தொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவிக்கும் என எதிர்பார்த்தோம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: ஸ்டாலின் பேட்டி
Dinakaran , Jan 8, 2019
போர்முரசு கொட்டும்போது புல்லாங்குழல் வாசிப்பது போல் தமிழக அரசின் செயல் உள்ளது : மு.க. ஸ்டாலின்
சென்னை : ஜூலைக்குள் லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், லோக் ஆயுக்தா அமைக்க அதிமுக அரசுக்கு என்ன தயக்கம் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக அரசு இயற்றியுள்ள லோக் ஆயுக்தா சட்டம் பல் பிடுங்கப்பட்டது என்று பேரவையில் அவர் கூறியுள்ளார். மேலும் நெசவாளர்கள், ஸ்டெர்லைட், உயர்மின் கோபுரங்கள் என பல பிரச்சனைகள் தமிழகத்தில் நெருப்பாய் இருக்கிறது என்றும், போர்முரசு கொட்டும்போது புல்லாங்குழல் வாசித்து கொண்டிருப்பது போல் உள்ளது தமிழக அரசின் செயல் என்றும் அவர் விமர்சித்துள்ளார். கஜா புயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணம் சரியாக சென்று சேரவில்லை என்று கூறிய மு.க.ஸ்டாலின், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
Dinakaran , Jan 7, 2019