Tamil Political News

Tamil news from around the world!

மத்திய அரசின் அடிமை ஆட்சிக்கு எதிராக ஸ்டாலின் குரல் கொடுத்து வருகிறார் : அமைச்சர் செந்தில் பாலாஜி
Dinakaran , Dec 14, 2018
மிசோரம் மாநில முதலமைச்சராக பதவியேற்க சோரம் தங்காவிற்கு ஆளுநர் அழைப்பு
அய்சால்: மிசோரம் மாநில முதலமைச்சராக சோரம் தங்கா நாளை மறுதினம் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் மத்தியபிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வெற்றி பெற்றது. தெலுங்கானாவில் பதவிக்காலம் முடிய 9 மாதங்கள் இருந்தும் சட்டப்பேரவையை கலைத்துவிட்டு தேர்தலை எதிர்கொண்ட சந்திரசேகர் ராவ் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 88 இடங்களில் வெற்றி பெற்று அம்மாநிலத்தின் முதல்வராக பதவியேறார். இதனை தொடர்ந்து 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் சட்டப்பேரவை தேர்தலில் மிசோ தேசிய முன்னணி கட்சி 37.6% வாக்குகளுடன் 26 இடங்களில் வெற்றி பெற்றது. பத்து ஆண்டுகளாக மிசோரத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து ஆட்சியமைக்க அழைக்குமாறு ஆளுநரிடம் மிசோ தேசிய முன்னணி தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சருமான சோரம் தங்கா கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர் ராஜசேகரன் ஆட்சியமைக்க வருமாறு சோரம் தங்காவிற்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து புதிய முதலமைச்சராக ஆளுநர் மாளிகையில் நாளை மறுதினம் நண்பகல் 12 மணிக்கு சோரம் தங்கா பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் முதலமைச்சருடன் அமைச்சர்கள் பதவியேற்பார்களா என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.
Dinakaran , Dec 12, 2018
ஜெ.ஜெயலலிதா என்ற பெயரில் புதிய கட்சியை பதிவு செய்ய மறுத்த விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்
சென்னை: ஜெ.ஜெயலலிதா கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை பதிவு செய்ய மறுத்தது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து வெளியேறிய பி.ஏ.ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெ.ஜெயலலிதா கட்சி என்றோ ஜெ.ஜெ கட்சி என்றோ பதிவு செய்ய முடியாது என்ற விண்ணப்பத்தை நிராகரித்ததற்கு எதிர்த்து தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து ஜோசப் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட விளக்கத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு 4 வாரம் அவகாசம் வழங்கி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Dinakaran , Dec 12, 2018
மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு: மாயாவதி அறிவிப்பு
Dinakaran , Dec 11, 2018
கேரள முன்னாள் அமைச்சர் மரணம்
திருவனந்தபுரம்: கேரள முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணன் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார்.கேரளாவில் கடந்த முறை உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் பாலகிருஷ்ணன் (85). இவர் தனது 75வது வயதில் வடக்கஞ்ேசரி தொகுதியில் முதன்  முதலாக போட்டியிட்டு எமஎல்ஏ ஆனார். அவருக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த பாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு 11  மணியளவில் இறந்தார்.
Dinakaran , Dec 11, 2018
5 மாநில தேர்தலில் பாஜகவிற்கு ஏற்பட்ட பின்னடைவால் அதிமுகவிற்கு வருத்தம் இல்லை : அமைச்சர் ஜெயக்குமார்
Dinakaran , Dec 11, 2018
மத்தியப்பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக பகுஜன் சமாஜ்வாதி கட்சி அறிவிப்பு
Dinakaran , Dec 11, 2018
மத்தியப் பிரதேசத்தில் பாஜக வெற்றி நிச்சயம்..... முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை
போபால்: மத்தியப் பிரதேசத்தில் 230 தொகுதிகளில் 75 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தம் 2,899 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கடந்த 2003ம் ஆண்டிலிருந்து பாஜ தொடர்ந்து ஆட்சியை நடத்தி வருகிறது. இப்போது 4வது முறையாக ஆட்சியை தக்கவைக்க பாஜ தீவிர பிரசாரம் மேற்கொண்டது. எனினும், இவ்விரு மாநிலங்களிலும் பாஜவுக்கும் காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி இருக்க வாய்ப்புள்ளதாக ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இங்கு பா.ஜ வெற்றி நிச்சயம் என முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அடித்துச் சொல்கிறார். ஒருவேளை பா.ஜ.வுக்கு பின்னடைவு ஏற்பட்டால், பா.ஜ கட்சியில் இருந்து விலகி தேர்தலை சந்தித்த சுயேச்சைகளை இணைத்து மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் பா.ஜ படு தீவிரமாக உள்ளது.
Dinakaran , Dec 10, 2018