News about Thanjavur

Tamil news from around the world!

திமுக தேர்தல் அலுவலகத்துக்கு மர்மநபர்கள் தீவைப்பு: தஞ்சையில் நள்ளிரவில் பரபரப்பு
தஞ்சை: தஞ்சையில் திமுக தேர்தல் அலுவலகத்துக்கு மர்மநபர்கள்  நள்ளிரவில் தீவைத்தனர்.  இது எதிர்கட்சிகளின் சதியென திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். தஞ்சை மாநகராட்சி 39வது வார்டு முனிசிபல் காலனியில் திமுக தேர்தல் அலுவலகம் செயல்பட்டு வந்தது. நேற்று இரவு திமுகவினர் தேர்தல் பணிகளை முடித்து கொண்டு தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். இந்நிலையில் திடீரென நள்ளிரவில் தேர்தல் அலுவலக கீற்று கொட்டகையில் தீப்பிடித்து எரிய துவங்கியது. அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சி செய்தும் முடியவில்லை. இதற்குள் கீற்று கொட்டகை அலுவலகம் முழுவதும் எரிந்து சாம்பலானது.இது பற்றிய தகவல் அறிந்ததும் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் துரை.சந்திரசேகரன், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சன்.ராமநாதன்  மற்றும் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.
Dinakaran , Mar 31, 2019
அமமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்
Dinakaran , Mar 22, 2019
தியாகராஜ சுவாமி ஆலய பாதுகாப்பு மையத்தில் சிலைகள் ஆய்வு பணிகள் தொடக்கம்
Dinakaran , Mar 6, 2019
விக்கிரவாண்டி - தஞ்சாவூர் 4 வழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
Dinakaran , Mar 6, 2019
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எப்போது நிரந்தரமாக மூடப்படும்?- உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
மதுரை :தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எப்போது நிரந்தரமாக மூடப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. டாஸ்மாக் நிறுவன தலைவர் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய மதுரைக் கிளை ஆணையிட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 2016ல் எத்தனை டாஸ்மாக் கடைகள் இருந்தன? 2016-க்கு பின்னர் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன?, அவை எத்தனை கட்டங்களாக மூடப்பட்டன? 2016-க்கு பின் எத்தனை டாஸ்மாக் கடைகள் புதிதாக திறக்கப்பட்டன?, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எப்போது முழுவதுமாக மூடப்படும்? என்றும் கேள்விகளை எழுப்பியுள்ளது.2016 முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளால் கிடைக்க பெற்ற வருவாய் எவ்வளவு? என்றும்  மாவட்ட வாரியாக அறிக்கை அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சை பள்ளியக்ரஹாரம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க தடை கோரி தஞ்சையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
Dinakaran , Feb 25, 2019
தமிழக அரசின் வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை 3 பேருக்கு வழங்கினார் முதல்வர் பழனிசாமி
சென்னை :  2019ம் ஆண்டின் தமிழக அரசின் வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை சென்னையை சேர்ந்த சூர்யகுமார், தேனி மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித்குமார், தஞ்சையை சேர்ந்த ஸ்ரீதர் ஆகியோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அண்ணா பதக்கம் பெறும் 3 பேருக்கும், ரூ.1 லட்ச ரூபாய்க்கான காசோலை, தங்க முலாம் பூசிய பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.குடியரசு தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள விழா மேடையில் மூவர்ண கொடியை ஏற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். இந்த விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Dinakaran , Jan 25, 2019
குடியரசு தின விழாவில் ராணுவ மரியாதையை ஏற்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
சென்னை : நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. சென்னை காமராஜர் சாலையில் ஆளுநர் பன்வாரிலால் கொடி ஏற்றினார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடி ஏற்றியபோது ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்பட்டது. முதல்வர் பழனிசாமி, தலைமை செயலாளர் கிரிஜா, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் உடன் உள்ளனர். இதனை தொடர்ந்து குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முப்படை வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு கோலாகலமாக நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலாலுக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து குடியரசு தின விழா விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார். குடியரசு தின விழாவையொட்டி மெரினா கடற்கரை முழுவதும பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நேற்றிரவு முதல் இன்று நிகழ்ச்சி முடியும் வரை மெரினா கடற்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் சென்னை முழுவதும், 15 ஆயிரம் போலீசாரும், தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். முக்கிய ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில், மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க மக்கள் கூடும் இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 2019ம் ஆண்டின் வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கம் சென்னையை சேர்ந்த சூர்யகுமார், தேனி மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித்குமார், தஞ்சையை சேர்ந்த ஸ்ரீதர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. வேளாண் துறை சிறப்பு விருது புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு செட்டியாப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சேவியருக்கு வழங்கப்படுகிறது. மேலும் அவருக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலை மற்றும் பதக்கம் வழங்கப்படுகிறது. அண்ணா பதக்கம் பெறும் 3 பேருக்கும், ரூ.1 லட்ச ரூபாய்க்கான காசோலை மற்றும் தங்க முலாம் பூசிய பதக்கம் மற்றும் சான்றிதழை விழாவில் முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
Dinakaran , Jan 25, 2019
தஞ்சை அரசு மருத்துவமனையில் பெண் உயிரிழப்பு : உறவினர்கள் ஆர்பாட்டம்
Dinakaran , Jan 11, 2019
ஹைட்ரோகார்பன் திட்டம் மூலம் தமிழகத்தை பாஜக வஞ்சிக்கப் பார்க்கிறது: கி.வீரமணி பேட்டி
Dinakaran , Jan 9, 2019
தஞ்சை மாவட்டம் அதிராமபட்டினம் பகுதி கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க கோரிய மனு: பதிலளிக்க தஞ்சை ஆட்சியருக்கு உத்தரவு
Dinakaran , Jan 9, 2019