News about Thoothukudi

Tamil news from around the world!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவு தினம் : பாதுகாப்பு பணியில் 3000 போலீசார்
தூத்துக்குடி : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவு தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே 22ம் தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். இதுதொடர்பான வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாளை தூத்துக்குடி பெல் ஓட்டலில் ஒரு தரப்பினர் நினைவஞ்சலி கூட்டம் நடத்துகின்றனர். இதன் காரணமாக அங்கு 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
Dinakaran , May 21, 2019
கமல் கட்சி அங்கீகாரம் ரத்து செய்ய வேண்டும் தமிழிசை வலியுறுத்தல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் தமிழக பாஜ தலைவர் தமிழிசை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஓட்டப்பிடாரம் உட்பட இடைத்தேர்தல் நடக்கும் 4 தொகுதிகளிலும் அதிமுக  வெற்றி பெறும் சூழல் உள்ளது. இதனால் எதிர்க்கட்சியினர் பதற்றத்துடன் உள்ளனர். மே 23ம் தேதி தேர்தல் முடிவு வந்ததும் ஆட்சி மாற்றம் வரும் என்பதெல்லாம் எடுபடாது. இது ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி தான். கமல்ஹாசன் முதலில் அவர் சொன்ன கருத்துக்கு மன்னிப்பு கேட்டு கட்சி பதவியில் இருந்து இறங்கட்டும். இந்துக்கள் குறித்து பேசியதற்காக அவரது கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். அவர் விஷ விதைகளை பரப்புகிறார். வேண்டும் என்றே வதந்தியை, பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். கமல் கட்சி தோழர்கள் தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் மக்கள் திருத்துவார்கள்.  இவ்வாறு அவர் கூறினார்.
Dinakaran , May 14, 2019
பெண் காவலருக்கு காவல் நிலையத்தில் வளைகாப்பு விழா
பெரம்பூர்: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர், கடந்த இரண்டரை ஆண்டுகளாக கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார். தனது கணவருடன்  சென்னையில் தனியாக வசிக்கும் மகாலட்சுமி, தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.உறவினர்கள் வெளி மாவட்டத்தில் உள்ளதால், அவருக்கு வளைகாப்பு செய்ய முடியாமல் போனது. இதனால், மன வேதனையில் இருந்துள்ளார். இதனை அறிந்த சக காவலர்கள்,  மகாலட்சுமிக்கு காவல் நிலையத்திலேயே  வளைகாப்பு செய்ய ஏற்பாடுகள் செய்தனர். அதன்பேரில், குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கோமளவல்லி மற்றும் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் மோகன்  தலைமையில் காவலர்கள் நேற்று முன்தினம், காவல் நிலையத்தில் சீமந்த  விழாவை கொண்டாடினர். இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Dinakaran , May 11, 2019
காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் தமிழக ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு தலா ₹2 லட்சம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
சென்னை,மே 9: காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த தமிழக  ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதிகளின் தாக்குதலால் வீர மரணமடைந்த 40 வீரர்களில் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம், சீவலப்பேரி கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியம், அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த சிவசந்திரன் ஆகியோரின் குடும்பங்களுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை சார்பாக தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Dinakaran , May 8, 2019
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மே 22-ல் நினைவஞ்சலி கூட்ட வழக்கு நாளை ஒத்திவைப்பு
Dinakaran , May 8, 2019
திருச்செந்தூர் கோயிலில் கர்நாடக முதல்வர் தரிசனம்
Dinakaran , May 7, 2019
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கர்நாடக முதல்வர் குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவகவுடா சாமி தரிசனம்
தூத்துக்குடி: முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவரது மகன் கர்நாடக முதல்வர் குமாரசாமி திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்ற தமிழ் கடவுளான முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் இரண்டாம் படை எனப் போற்றப்படும் மிகச் சிறப்புமிக்க கோயிலாகும். இது தேவார வைப்புத்தலமாகக் கருதப்படுகிறது.இந்நிலையில், கர்நாடக முதல்வர் குமாரசாமி, அவரது தந்தையும் மதச்சார்ப்பற்ற ஜனதா தளத்தின் தேசிய தலைவருமான தேவ கவுடா ஆகியோர், திருச்செந்தூர் முருகன் கோவில் இன்று சாமி தரிசனம் செய்தனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்த இருவரும், அங்கிருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலை வந்தடைந்தனர். அங்கு இருவருக்கும் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.  
Dinakaran , May 7, 2019
தூத்துக்குடியில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்படவில்லை: சத்யபிரதா சாஹூ
Dinakaran , Apr 17, 2019
வேலூர் தொகுதி தேர்தல் ரத்து, தூத்துக்குடியில் ரெய்டு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
சென்னை: வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து, தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில் ரெய்டுக்கு  அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  முத்தரசன்(இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்): ஆளும் கட்சி கூட்டணியின் அட்டூழியங்களை வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம், வேலூர் தேர்தலை ரத்து செய்தது கண்டனத்திற்குரியது. இதுபோல், தூத்துக்குடி மக்களவை திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில் ரெய்டு நடத்தியதும் கண்டனத்துக்கு உரியது.  கே.பாலகிருஷ்ணன்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்):  தமிழகம் முழுவதும் அதிமுக,பாஜக கூட்டணி வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பல நூறு கோடி ரூபாய் விநியோகித்து வருகின்றனர். இவற்றை தடுக்காத தேர்தல் ஆணையம் வேலூர் தேர்தலை ரத்து செய்துள்ளது பாரபட்சமானது,  ஜவாஹிருல்லா(மனிதநேய மக்கள் கட்சி தலைவர்): திமுக இந்த தேர்தலில் வெற்றிபெறக் கூடாது என்ற நோக்கத்தில் வேலூர் தேர்தல் ரத்து என அறிவித்துள்ளது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. இதனால் மக்கள் மத்தியில் தேர்தல் ஆணையத்தின் இருந்த நம்பிக்கை குறைந்துள்ளது.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி:  வேலூர் மக்களவை தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்திருப்பது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கிற செயல். அதேபோல தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை  நடத்தியுள்ளார்கள். இதன்மூலம் நேர்மையான தேர்தல்  நடத்துவதில் தேர்தல் ஆணையம் படுதோல்வி அடைந்திருக்கிறது. இத்தகைய படுபாதக  செயலை செய்தவர்கள் அனைவரும் தேர்தலுக்கு பிறகு கடுமையான விசாரணைக்கு  உட்படுத்தப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.
Dinakaran , Apr 16, 2019
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கி.மு. 905 கால பொருட்கள் கண்டுபிடிப்பு : மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல்
Dinakaran , Apr 4, 2019
தேர்தலில் வெற்றி பெற்றால் மீண்டும் மத்தியில் ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சியை அமைப்போம் : அமித்ஷா
Dinakaran , Apr 2, 2019
சிவகங்கை தொகுதியில் ஹெச்.ராஜா, கார்த்தி சிதம்பரம், சினேகன் ஆகியோரது வேட்பு மனுக்கள் ஏற்பு
Dinakaran , Mar 27, 2019
விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்வார் தேமுதிக தேர்தல் அறிக்கை இல்லை: பிரேமலதா பேட்டி
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் நிச்சயமாக பங்கேற்பார் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று மாலை 4 மணி விமானத்தில் மதுரை புறப்பட்டு சென்றார், முன்னதாக. சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேமுதிக 4 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. நாங்கள் தேர்தல் அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. ஆனால் அதே நேரத்தில் எங்களது கூட்டணி கட்சிகளான பாஜ, அதிமுக தேர்தல் அறிக்கையில் அவர்கள் கொடுத்த  தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிச்சயமாக தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பார். நான் வரும் 27ம் தேதி முதல் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வேன். தூத்துக்குடியில் 2 முக்கிய கட்சிகளில் 2 பெண்கள்  போட்டியிடுவது ஆரோக்கியமான போட்டி. பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. தற்போது கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் நான் கலந்து கொள்ள செல்கிறேன் என்றார்.
Dinakaran , Mar 24, 2019
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அடுத்த மாதம் தேர்தல் பரப்புரை
Dinakaran , Mar 24, 2019
தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு திட்டத்தில் இதுவரை முடிக்கப்பட்ட பணிகள் என்ன? அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு
மதுரை: தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு திட்டத்தில் இதுவரை முடிக்கப்பட்ட பணிகள் என்ன எனவும், முடிக்கப்பட்ட பணிகள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 40,000 ஹெக்டேர் நிலங்கள் பாசனவசதி பெறும் வகையில் செயல்படுத்தப்படும் என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தாமிரபரணியில் இருந்து 13 டிஎம்சி நீரி வீணாக கடலில் கலப்பதால் மூன்று ஆறுகளை இணைக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. மேலும் முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு தொடர்ந்த வழக்கை ஏப்ரல் 4-ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.
Dinakaran , Mar 21, 2019
தூத்துக்குடியில் வழக்கறிஞரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 8 அமெரிக்க வகை துப்பாக்கிகளை சமர்ப்பிக்க மதுரைக்கிளை உத்தரவு
Dinakaran , Mar 21, 2019
அதிமுக பரிந்துரைத்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இல்லையென்பதால் தேமுதிக நிர்வாகிகள் அதிருப்தி
Dinakaran , Mar 6, 2019
கயத்தாறு வீரர் குடும்பத்துக்கு நீதிபதிகள் 3.15 லட்சம் நிதி
Dinakaran , Feb 21, 2019
ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கனிமொழி, டிடிவி, திருமாவளவன் உள்ளிட்டோர் கருத்து
புதுடெல்லி: ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தூத்துக்குடி மக்களுக்கு கிடைத்த தற்காலிக வெற்றி என திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதேபோல, ஸ்டெர்லைட்டில் உச்சநீதிமன்ற தீர்ப்பு, போராடிய மக்களின் உண்மையான உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றி எனவும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் வழக்கு தொடர்ந்தால் அதை தமிழக அரசு சரியாக எதிர்கொள்ள வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது எனவும் கூறியுள்ளார்.
Dinakaran , Feb 18, 2019
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவு
டெல்லி :  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்து தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவன கோரிக்கைகையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. ஸ்டெர்லைட் திறக்க அனுமதித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. ஸ்டெர்லைட் ஆலை வழ்க்கில் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக வேதாந்தா நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. 
Dinakaran , Feb 17, 2019
பராமரிப்பு பணி காரணமாக சேலம் வழியாக பெங்களூரு செல்லும் 4 ரயில்கள் ரத்து
Dinakaran , Feb 6, 2019