New about Tirupur, Tamilnadu

Tamil news from around the world!

திருப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி
Dinakaran , Oct 15, 2018
திருப்பூர் கோர்ட்டில் மாவோயிஸ்ட் ஆஜர்
திருப்பூர்: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் கடந்த 2015ம்  ஆண்டு மே 4ம் தேதி மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த ரூபேஷ், அவரது மனைவி ஷைனி, அனூப், கண்ணன், வீரமணி ஆகிய 5 பேரை, கியூ பிரிவு போலீசார், கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதில், ரூபேஷ், ஷைனி ஆகியோர் மீது திருப்பூரில் போலி அடையாள ஆவணங்களை கொடுத்து சிம்கார்டு வாங்கியதாக திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஷைனி ஜாமீனில் உள்ள நிலையில் இந்த வழக்கு விசா ரணைக்காக  ரூபேஷ், திருப்பூர் அமர்வு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை 27ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Dinakaran , Aug 31, 2018
முதல்வருக்கு எதிராக கருத்து வாலிபர் கைது
திருப்பூர்: முதல்வருக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட திருப்பூர் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் தென்னம்பாளையத்தை சேர்ந்தவர் கனகசுந்தரம் (35). இவர், கொங்கு மண்டலத்துக்குள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் நுழைய முடியாது என்பது போன்ற   கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து தென்னம்பாளையத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் கணேசன் (58) அளித்த புகாரின் பேரில், திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிந்து கனகசுந்தரத்தை நேற்று  கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Dinakaran , Aug 13, 2018
இயற்கையை காக்க பெண் சாகச பயணம்
ஆலந்தூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் சைபி மேத்யூ, இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வசித்து வருகிறார். இவர், இயற்கை மற்றும்  பெண்மையை காக்கும் நோக்கத்தோடும் மற்றும் உலக சாதனை படைக்கவும் மோட்டார் சைக்களில் 3000 கி.மீ. தூரம் நின்றபடி பயணம் செய்யும்  சாகசத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊட்டியில் தொடங்கினார். நேற்று மாலை சென்னைக்கு வந்தார். சென்னையில் சைதாபேட்டை வந்த  அவருக்கு சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் வரவேற்று, சால்வை அணிவித்து  பாராட்டினர். முன்னதாக சைபி மேத்யூ சைதாபேட்டையில் ஒரு மரக்கன்றை நட்டார். இந்நிகழ்ச்சியில், தேசிய பசுமைதீர்ப்பாய நீதிபதி பி.ஜோதிமணி,  எக்ஸ்னோரா நிறுவன இணை பொதுச்செயலாளர் ஆர்.கோவிந்தராஜ், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
Dinakaran , Jun 13, 2018
சென்னையில் மய்யம் விசில் செயலி நாளை வெளியீடு
Dinakaran , Apr 29, 2018
உடுமலை சங்கர் கொலை வழக்கு: மேல்முறையீடு செய்ய காவல்துறைக்கு அனுமதி
சென்னை: உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யா தாய் உள்பட மூவர் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உடுமலைப்பேட்டை டி.எஸ்.பி.யின் மனுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கலப்புத்திருமணம் செய்த சங்கர் 2016ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி கொலை செய்யப்பட்டார். சங்கர் மனைவி கவுசல்யாவின் தாய் அன்னலெட்சுமி உள்பட 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர். காவல்துறைக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம். சங்கர் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது திருப்பூர் நீதிமன்றம். அன்னலெட்சுமி உள்பட 3 பேர் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய காவல்துறை முடிவு செய்துள்ளது.
Dinakaran , Mar 13, 2018