News about Trichy

Tamil news from around the world!

பொன்னமராவதி கொந்தளிப்பு அவதூறு வீடியோ உருவாக்கிய 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது
புதுக்கோட்டை: மக்களவை தேர்தலின்போது ஒரு சமூகத்தினரை அவதூறு செய்யும் வகையில் வெளியான வீடியோ புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்ததில், இந்த வீடியோவை சிங்கப்பூரில் இருந்து உருவாக்கிய செல்வகுமார் (34),  வசந்தகுமார்(30),  சக்தி என்ற சத்தியராஜ்(30), ரெங்கையா(45) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து  சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய செல்வகுமார், வசந்தகுமார், சத்தியராஜ், ரெங்கையா ஆகிய நான்கு பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, எஸ்பி செல்வராஜ் பரிந்துரையின்படி கலெக்டர் உமாமகேஸ்வரி  உத்தரவிட்டார். இதன்பேரில் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்த விவரம் திருச்சி மத்திய சிறைக்கு தெரிவிக்கப்பட்டது. 
Dinakaran , May 5, 2019
களிமண்ணில் கலந்து கடத்தி வந்த தங்கம் பறிமுதல்
அவனியாபுரம்: இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து நேற்று முன்தினம் இரவு மதுரை விமான நிலையம் வந்த தனியார் விமானத்தில் பயணிகளின் உடைமைகளை, உதவி கமிஷனர் வெங்கடேஷ் பாபு  தலைமையில் சுங்கத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது  பயணிகளான ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியை சேர்ந்த பார்த்திபன்(35), திருச்சி, தென்னூரை சேர்ந்த அப்துல் ரியாஸ்(33) ஆகியோர் களிமண் பொட்டலங்களை  வைத்திருந்தனர். அதிகாரிகள் விசாரித்தபோது, ‘சிறுவர்கள் பொம்மை செய்து விளையாடும் பொருள்’ என தெரிவித்தனர். சோதனையில் தங்கத்தை பவுடராக மாற்றி, அதனை களிமண்ணிற்குள் கலந்து கொண்டு வந்தது  தெரிந்தது. அவர்களிடமிருந்து 895 கிராம் தங்கம் எடையுள்ள ₹29 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
Dinakaran , Apr 29, 2019
காஞ்சிபுரத்தில் அருகே ஏடிஎம்மில் நிரப்ப கொண்டுவந்த ரூ.3.20 கோடி பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி
Dinakaran , Mar 21, 2019
3 தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் விரைவில் பதில்மனு தாக்கல் செய்வதாக தேர்தல் ஆணையம் உறுதி : திமுக எம்பிக்கள் பேட்டி
Dinakaran , Mar 16, 2019
மக்களவைத் தேர்தல் 2019 : காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் விவரம்
சென்னை : மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட உள்ளது. காங்கிரஸ் போட்டி மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, தேனி, திருவள்ளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதிகள் காங்கிரஸ் போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் - 10,மதிமுக - 2, இந்திய கம்யூனிஸ்ட்-2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 2, விடுதலை சிறுத்தைகள்- 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- 1, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்- 1 ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு எட்டப்பட்டுள்ளது. தொகுதிகள் ஒதுக்கப்படா விட்டாலும், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
Dinakaran , Mar 15, 2019
விக்கிரவாண்டி - தஞ்சாவூர் 4 வழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
Dinakaran , Mar 6, 2019
மனநலம் பாதிக்கப்பட்ட கர்பிணி பெண்ணை கண்டுபிடிக்க கோரிய வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
Dinakaran , Feb 22, 2019
குடிபோதையில் செல்போனை பறித்த 2 பேர் கத்தியால் குத்திக் கொலை
Dinakaran , Feb 19, 2019
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் சுப்ரமணியன் உடல் மதுரை வந்தது: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அஞ்சலி
Dinakaran , Feb 16, 2019