Nakkheeran
“முதல்வர் விஜய் திணறுவதும், தடுமாறுவதும் வாடிக்கையாகிவிட்டது” - இ.பி.எஸ். விமர்சனம்!
காவிரி தொழில்நுட்பக் குழுவின் அருமை தெரியாமல் முடக்கி வைத்திருக்கும் முதல்வர் ஜோசப் விஜய்யின் பொய்க்கால் குதிரை அரசுக்கு கண்டனம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கையில், “காவிரி ஆறும், காவிரி நீரும் தமிழகத்தின் உயிர்நாடியாகும். இந்த இரண்டிலும் எந்தப் பிரச்சனை ஏற்பட்டாலும், அது தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் உணவு மற்றும் குடிநீரில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். விளையாட்டுப் பிள்ளைகளின் கையில் சிக்கிய பொம்மைபோல் த.வெ.க. என்னும் திறமையற்றவர்களின் கையில் சிக்கியுள்ள தமிழக அரசு, தற்போது காவிரி பிரச்சனை குறித்து எந்தவித புரிதலில் உள்ளது என்…