Daily Thanthi
ஆண்டுதோறும் நவம்பர் 1-ந் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும்-தமிழக அரசு அறிவிப்பு
சென்னை, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதியை பெருமைப்ப டுத்திடும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் நாள் 'தமிழ்நாடு நாள்' என்ற பெயரில் தமிழ்நாடு அரசால் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நவம்பர் 1-ம் நாள் தமிழ்நாடு நாள் விழாவாக சென்னை அருங்காட்சியக அரங்கத்தில் நாளை…