Nakkheeran
“தவெக ஆட்சிக்கு மைனஸ் பூஜ்ஜியம் தான் மதிப்பெண்...” - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி!
திருச்சி விமான நிலையத்தில் நேற்று (30-10-26) இரவு அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தவெக ஆட்சி பொறுப்பேற்று 6 மாத காலம் ஆகிறது. இந்த காலத்தில் படிப்படியாக விலைவாசி உயர்ந்து விண்ணை முட்டுகின்ற அளவுக்கு உயர்ந்துவிட்டது. இந்த விலைவாசியை கட்டுப்படுத்துவதற்கு இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமைச்சர் ரமேஷ் ரீல்ஸ் போட்டு எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார். நான் ரியலாக எம்.எல்.ஏ ஆகியிருக்கிறேன், உழைத்து எம்.எல்.ஏ ஆகியிருக்கிறோம். மக்களுக்கு சேவை செய்து மக்கள் மத்தியில் நெஞ்சை நிமிர்த்தி நடக்கிறோம். 8 முறை சட்டமன்றம்…