உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

பரிசு தருவதாக ஏமாற்றி வாட்ஸ்அப்பில் இலட்சக்கணக்கில் பணம் பறித்த பெண் அதிரடி கைது

பெறுமதியான பரிசுப் பொதி வழங்குவதாகக் கூறி, வாட்ஸ்அப் குழுவின் ஊடாக 14 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாகக் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதனையடுத்து, நேற்று (30) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தில் வைத்து குறித்த பெண்ணை விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ...