உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

மீண்டும் மீண்டுமா?....; கோவை மத்திய சிறையில் இருந்து கைதி தப்பியோட்டம்!

சில தினங்களுக்கு முன்பு சென்னை புழல் சிறையில் 2 கைதிகள் தப்பிச் சென்றதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 26ஆம் தேதி தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. தப்பியோடிய கைதிகளை போலீசார் தீவிரமாக தேடி பிடித்து மீண்டும் சிறையில் அடைத்த போதிலும், அடுத்தடுத்து இரண்டு பெரிய சிறையில் இருந்து கைதிகள் தப்பியோடிய சம்பவங்களால் தவெக அரசின் நிர்வாகம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. நீதிமன்றத்தால் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளை கூட பாதுகாக்காமல் தப்பியோட வைக்கும் அரசாக தவெக அரசு இருப்பதாகவும், இதன் மூலம…