Nakkheeran
“கைதிகள் அடிக்கடி தப்பி ஓடும் நிகழ்வுகள் விரும்பத்தக்கது அல்ல” - அன்புமணி கவலை!
சில தினங்களுக்கு முன்பு சென்னை புழல் சிறையில் 2 கைதிகள் தப்பிச் சென்றதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 26ஆம் தேதி தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து சிறைத்துறை சார்பாக பல்வேறு நிர்வாக மாற்றங்களை தமிழக அரசு மேற்கொண்டிருக்கும் சூழ்நிலையில், மீண்டும் சிறையில் இருந்து ராகவன் என்ற கைதி தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, “கோவை அன்னூர் பகுதியில் திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாகக் க…