உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

'அக்கா' வெப் சீரிஸ் அனுபவம்: உறவினருடன் காதல் காட்சியில் நடித்த கீர்த்தி சுரேஷ்; 'கஷ்டமாக இருந்தது' என பேட்டி

நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே இணைந்து நடித்துள்ள 'அக்கா' வெப் தொடர் அக்டோபர் 30 அன்று நெட்ஃபிக்ஸில் (Netflix) ஓ.டி.டி தளத்தில் வெளியானது. திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தத் தொடரை ஒய்.ஆர்.எப் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி இத்தொடரை எழுதி இயக்கியுள்ளார். ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ள இந்த தொடர், அதிகாரத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்தத் தொடரில் தன்வி ஆஸ்மி, அன்ஷுமான் புஷ்கர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் இத்தொடர் குறித்த அறிவிப்பு வெளியானது. இதன் முதல் தோற்றப் போஸ்டர் 202…