Nakkheeran
”வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்”; அரசு திடீர் அறிவிப்பு
காற்று மாசுபாடு என்பது மக்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் மிக முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மக்களின் ஆரோக்கியத்தைக் கவனத்தில் கொண்டும், காற்று மாசுபாட்டைத் தவிர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தலைநகர் டெல்லியில், காற்று மாசுபாடு என்பது மிக அதிகப்படியான அளவை எட்டியுள்ளது. இந்த மாசுபாட்டால், மக்கள் சுவாசப்பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், காற்று மாசுபாட்டைக் குறைக்கும் விதமாக கட்டுமானப்பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, கட்டுமானம், இடிப்பு பணிகள், மேம்பாலம் உள்ளிட்ட பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளத…