Indian Express Tamil
'காலையில் எழுந்ததும் முதல் டிரிங்க்... 57 வயதிலும் இளமைக்கு காரணம் இதுதான்': ரோஜா பட நாயகி மதுபாலா இப்போ எப்படி இருக்கிறார்?
நடிகை மதுபாலா தனது 57 வயதிலும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதற்குப் பின்பற்றும் உணவுப் பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சி முறைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். காலையில் எழுந்ததும் பட்டை, இஞ்சி கலந்த தண்ணீரைக் குடிப்பது, பாதாம் சாப்பிடுவது உள்ளிட்ட தனது அன்றாடப் பழக்கங்களை அவர் பகிர்ந்துள்ளார். தமிழில் வெளியான ‘ரோஜா’ திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை மதுபாலா. இவர் தனது உணவுப் பழக்கங்கள் குறித்து உள்ளடக்க உருவாக்குநர் பிராச்சி சர்மாவுக்கு அளித்த நேர்காணலில் பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். காலை உணவைத் தவிர்க்கும் மதுபாலா! தனது உணவுப் பழக்கம் குறித்துப் பேசி…