Polimer News
கோவை மத்திய சிறை வளாகத்தில் இருந்து விசாரணைக் கைதி தப்பி ஓட்டம்..
கோவை மத்திய சிறை வளாகத்தில் இருந்து கைதி ராகவன் என்பவர் தப்பி ஓடியுள்ளார். கொள்ளை வழக்கு தொடர்பாக அன்னூர் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட ராகவன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்க 4 போலீசார் பாதுகாப்பாக அழைத்து வந்தனர். சிறைச்சாலை வளாகத்தில் அவரது கை விலங்கை போலீசார் அவிழ்த்து விட்டபோது போலீசார் 4 பேரையும் தள்ளிவிட்டு தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. கவனக் குறைவாக செயல்பட்ட போலீசார் 4 பேரும் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.