Hindu Tamil Thisai
ஊராட்சித் தேர்தலை நடத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை: தமிழகத்தில் ஊராட்சிகளின் பதவிக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவற்றை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்து அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஊராட்சிகளுக்கான தேர்தலை உரிய காலத்தில் நடத்தி முடிக்க கால வரம்பு நிர்ணயித்து தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி, செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ஆர்.பாஸ்கரன் என்ற வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார். நிர்வாக காரணத்தை கூறி…