Polimer News
அந்தமான் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் 'முரசு' புயல் உருவாக வாய்ப்பு...
அந்தமான் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவும் வானிலை அமைப்பு, அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளது. இதனைத் தொடர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்த 24 மணி நேரத்திற்குள் புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. இந்தப் புயல் உருவாகும் பட்சத்தில், அதற்கு இந்திய வானிலை மையம் பரிந்துரைத்துள்ள ‘முரசு’ என்ற தமிழ்ப் பெயர் சூட்டப்பட உள்ளது. புயலாக வலுவடைந்த பிறகு, மேற்கு வங்கக் கடல் பகுதி வழியாக நகர்ந்து, வரும் நவம்பர் 2ஆம் தேதி மாலை ஆந்…