உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் 2026 : சீமானுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் கள நிலவரம் என்ன?

அம்பாசமுத்திரம் தொகுதியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு இசக்கி சுப்பையா வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிராக வெடித்த உட்கட்சி மோதல் காரணமாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவெக அரசுக்கு ஆதரவு அளித்ததன் காரணமாக சுமார் 25 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்த அதிருப்தியின் காரணமாக இசக்கி சுப்பையா உள்ளிட்ட அதிமுக எம்.எல். ஏக்கள் சிலர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.இதன் காரணமாகவே அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தலுக்கு வழிவகுத்தது.