Vikatan
`₹114 தினக்கூலி பெற்ற பெண்ணிடம், ₹1,80,692 கோடி சொத்து' - ஐபோனால் சீனாவின் பணக்காரப் பெண்மணி ஆன கதை!
ஒரு காலத்தில் தொழிற்சாலையில் எளிய ஊழியராகப் பணியாற்றி, பள்ளிக் கல்வியை பாதியிலேயே கைவிட்ட சூ குன்ஃபேய் (Zhou Qunfei) என்ற பெண்மணி, இன்று விடாமுயற்சியால் சீனாவின் மிகப் பெரிய பணக்காரப் பெண்மணியாக மீண்டும் உருவெடுத்துள்ளார். லென்ஸ் டெக்னாலஜி (Lens Technology) என்ற புகழ்பெற்ற கண்ணாடித் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரான 56 வயது சூ குன்ஃபேய், சுமார் 127 பில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் சுமார் 1,80,692 கோடி ரூபாய்…