IBC Tamil
சட்டத்தின் முன் ஒவ்வொரு தனிநபருக்கும் நீதி: அநுர சுட்டிக்காட்டு
சட்டம் சமத்துவமற்ற முறையில் பயன்படுத்தப்படுவதாக உணரப்படும் ஒரு சமூகம், ஒருபோதும் நிலையான மற்றும் நல்ல சமூகமாக மாறாது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் தேசிய அறிஞர்கள் அமைப்பின் தேசிய மாநாட்டில் இன்று (31) பங்கேற்றபோது ஜனாதிபதி இந்த விடயத்தை கூறியுள்ளார். நிகழ்ச்சியில் மேலும், உரையாற்றிய ஜனாதிபதி, அவநம்பிக்கையும் விரக்தியும் சட்டத்தின் முன் ஒவ்வொரு தனிநபருக்கும் நீதி வழங்கப்படுகிறது என்ற கண்ணோட்டத்தை சமூக...