Indian Express Tamil
ஓவன் இல்லையா? கவலை வேண்டாம்; வீட்டிலிருக்கும் கடாய், குக்கரில் பஞ்சு போன்ற கேக் செய்யலாம்
கேக் சாப்பிட அனைவருக்கும் பிடிக்கும். ஆனால், வீட்டில் ஓவன் இல்லை என்பதால் பலரும் கேக் செய்யத் தயங்குவதுண்டு. இனி அந்த கவலையே தேவையில்லை! விலை உயர்ந்த சாதனங்களோ, சிறப்பு வசதிகளோ இல்லாமல் நமது சமையலறையில் இருக்கும் சாதாரண பிரஷர் குக்கர், தடிமனான கடாய் அல்லது இட்லி பாத்திரத்தைப் பயன்படுத்தியே கடைகளில் வாங்குவது போல மிகவும் மென்மையான, சுவையான கேக்கை எளிதாகத் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மைதா (அல்லது கோதுமை மாவு): 1 கப் சர்க்கரை (பொடித்தது): 1/2 கப் பால்: 1/2 கப் எண்ணெய் பேக்கிங் பவுடர்: 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா: 1/4 டீஸ்பூன் வெனிலா எசென்ஸ்: 1 டீஸ்பூன் உப்பு செய்முறை: ஒரு அகலமான பாத்திரத்தில்…