Dinamani, Sports
இன்று முதல் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி!
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கியின் 9-ஆவது ஆண்டு போட்டி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் செவ்வாய்க்கிழமை (அக். 27) தொடங்குகிறது. நவம்பா் 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் இந்தியா, சீனா, வங்கதேசம், ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. ஆட்டங்கள் யாவும் ஜலந்தா் மற்றும் மொஹாலியில் நடைபெறவுள்ளன. தொடக்க சுற்றில் ஒவ்வொரு அணியும், இதர அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். அதன் முடிவில் முதல் 4 இடங்களைப்…