Nakkheeran
அமித்ஷா குறித்த பேச்சு; ராகுல் காந்திக்கு குட் நியூஸ் சொன்ன நீதிமன்றம்!
கடந்த 2018ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சியின் சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த வகையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக பா.ஜ.க.வைச் சேர்ந்த விஜய் மிஸ்ரா, உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சுல்தான்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என கடந்த 2023ஆம் ஆண்டு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி கடந்த 2023ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல்…