Nakkheeran
”குழந்தைப் பருவத்து ஏமாற்றம்”; உலக சாதனையாக மாற்றிய பெண்!
சிறுவயதில் தான் ஆசைப்பட்ட நிஜ குதிரையைத் தனது பெற்றோர் வாங்கி தர மறுத்ததால், குதிரை மீது தீராத ஆர்வம் கொண்ட பெண் ஒருவர் இன்று உலக சாதனையாளராக மாறியுள்ளார். இங்கிலாந்து நாட்டின், சபாக் பகுதியில் உள்ள லோவெஸ்டாஃப்ட் நகரைச் சேர்ந்தவர் மிராண்டா வோர்பி (43). இவருக்கு சிறுவயது முதலே குதிரை என்றால் தீராத ஆசை. எனவே, தனக்கு ஒரு நிஜ குதிரை வேண்டும் என்று தனது பெற்றோரிடம் அடம்பிடித்துக் கேட்டுள்ளார். ஆனால், குடும்பச் சூழல் மற்றும் பிற காரணங்களால் அவரது பெற்றோரால் நிஜ குதிரையை வாங்கி தர இயலவில்லை. இதனால், மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளான மிராண்டா, நிஜ குதிரைகளுக்குப் பதிலாகப் பொம்மை குதிரைகளை வாங்க ஆர்வம் காட்…