Daily Thanthi
பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ வழக்கம்போல் இயங்கும்: மெட்ரோ நிர்வாகம்
சென்னை, பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரெயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரெயில் நிர்வாகம் சென்னையில் பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரெயில் சேவை நாளை முதல் நிறுத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இந்நிலையில் வெளியான தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை என்றும், வழக்கம் போல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது…