Nakkheeran
224 திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு மானியம் வழங்கிய தமிழக அரசு!
தமிழ்நாடு அரசு சமூகப் பொறுப்பும், சமுதாய விழிப்புணர்ச்சியுமாக திரைப்படங்களைத் தரமாகவும், சிறிய முதலீட்டிலும் தயாரித்து வெளியிடுவோரை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்த் திரைப்படங்களுக்கு அரசு மானியம் வழங்கும் திட்டத்தினை, செயல்படுத்தி வருகிறது. ஆனால் 2015 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை வெளியான படங்களுக்கு மானியம் கொடுக்கப்படாமல் நிலுவையில் இருந்தது. இதனை நிறைவேற்றக் கோரி தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்து வந்தனர். அது தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி அரசு மானியம் பெற விண்ணப்பித்த திரைப்படங்களை ஆய்வு செய்து தகுதி வாய்ந்த படங்களைத் தேர்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் த…