Samayam Tamil
Cooking oil bottle outside sticky oil removing: சமையல் எண்ணெய் பாட்டிலை தொட்டால் பிசுபிசுப்பாக இருக்கிறதா? அதை சுத்தம் செய்யும் வழிகள்
சமையலறையில் தினமும் பயன்படுத்தும் பொருட்களில் சமையல் எண்ணெய் பாட்டிலும் ஒன்று. எண்ணெயை ஊற்றிவிட்டு பாட்டிலை மீண்டும் வைக்கும்போது அதன் வெளிப்புறத்தில் சிறிதளவு எண்ணெய் சிந்தியிருப்பதைப் பார்க்கலாம். இதனை உடனடியாகத் துடைக்காமல் விட்டுவிட்டால், நாளடைவில் பாட்டிலின் மேற்பரப்பு முழுவதும் பிசுபிசுப்பாக மாறிவிடும். குறிப்பாக, பாட்டிலின் மூடி, கழுத்துப் பகுதி மற்றும் கைப்பிடிக்கும் இடங்களில் எண்ணெய்ப் படலம் அதிகமாகச் சேரும். சாதாரணமாகத் தண்ணீரால் கழுவினாலும் இந்தப் பிசுபிசுப்பு முழுமையாக போகாது. இதனுடன் தூசியும் சேரும்போது பாட்டில் தோற்றம் மோசமாக காட்சியளிக்கும். இதற்காகக் கடுமையான கெமிக்கல்களைப் பய…