Nakkheeran
நள்ளிரவில் தவறி விழுந்து காயம்; பாலிவுட் இயக்குநர் சஞ்சய் குப்தா மறைவு
பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் குப்தா காலாமாகியுள்ளார். 1994ஆம் ஆண்டு சஞ்சய் தத் நடிப்பில் வெளியான ‘ஆதிஷ்: ஃபீல் தி ஃபயர்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின்பு சஞ்சய் தத்தை வைத்தே ‘கௌஃப்’(Khauff), ‘காண்டே’, ‘முசாஃபிர்’ மற்றும் ‘ஜிந்தா’ படங்களை இயக்கியுள்ளார். இதைத் தவிர்த்து ‘ஷூட்அவுட் அட் வடலா’, ‘ஜஸ்பா’ , ‘காபில்’ மற்றும் ‘மும்பை சாகா’ உள்ளிட்ட மொத்தம் 20 படங்களை இயக்கியுள்ளார். இவரது படங்கள் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மற்ற நாட்டு மொழிப் படங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. குறிப்பாக குற்றப் பின்னணி, அதிரடி ஆக்ஷன் மற்றும் கேங்ஸ்டர் ஜானரில் தனது தனித்துவமான இயக்கம் மூலம் கவனம…