IBC Tamil
திலீபனின் சிலையை நிறுவியதற்கும் எமது கட்சிக்கும் எவ்வித தொடர்புமில்லை: கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டு
தியாகதீபம் திலீபனின் திருவுருவச்சிலை அகற்றப்பட்ட விவகாரத்தில் தமது கட்சி மீது சமூக ஊடகங்களில் திட்டமிட்டு விமர்சனங்கள் பரப்பப்படுவதாக கூறியுள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தியாகதீபம் திலீபனின் நினைவுச் சிலையை அமைக்கும் பணியைத் தங்களது கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்னின்று செய்யவில்லை எனவும் ஐ.பி.சி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் அடித்துக் கூறியுள்ளார் கஜேந்திரகுமார். எனினும், அந்தச் சிலையை யார் செய்திருந்தாலும்...