Polimer News
செஞ்சி அருகே கிணற்றில் சடலமாக கிடந்த குழந்தை..! தந்தை கைதானது எப்படி?
"மகனை கிணற்றில் வீசிவிட்டேன்" வெள்ளிக்கிழமையன்று காலையில், செல்வராஜ் வீட்டில் இருந்து 150 மீட்டர் தொலைவில் இருந்த கிணற்றின் அருகே நின்றுள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த நபர் ஒருவர் இங்கே என்ன செய்கிறாய்? என கேட்டதற்கு, தனது கடைசி மகனை கிணற்றில் வீசிவிட்டதாக கூறியுள்ளார். செல்வராஜ் மதுபோதையில் இருந்ததால், விளையாட்டிற்காக சொல்கிறார் என ஆரம்பத்தில் நினைத்த நபர், செல்வராஜின் குழந்தை மாயமானது தெரிந்ததால், உண்மையாகவே சிறுவன் கிணற்றில் தான் இருக்கிறானா? என அச்சம் ஏற்பட்டுள்ளது. கிணற்றில் சடலமாக சிறுவன்..! அங்கிருந்தவர்கள் நல்லான்பிள்ளைபெற்றான் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து அங்கு…