Hindu Tamil Thisai
மாற்றுத் திறனாளிகள் 400 பேருக்கு இணைப்புச் சக்கர ஸ்கூட்டர் வழங்க ரூ.4 கோடி ஒதுக்கி அரசாணை
சென்னை: மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலர் சோ.மதுமதி வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகள் படிப்பு, வேலைக்காகப் பயணம் செய்வதில் உள்ள சிரமத்தை குறைக்கவும், அவர்களின் தன்னிச்சையான செயல்பாட்டுக்கும் வாழ்வாதாரத்துக்கும் உதவும் வகையிலும் முதல்கட்டமாக 400 பேருக்கு ரூ.4 கோடியில் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட உள்ளன. இவற்றை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலம் கொள்முதல் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது…